search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிப்பூர் பிரச்சினையில் மத்திய அரசு ஆதாயம் தேடுகிறது
    X

    மணிப்பூர் பிரச்சினையில் மத்திய அரசு ஆதாயம் தேடுகிறது

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நடைபெறும் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தார்.
    • மணிப்பூர் போன்ற விவகாரங்களில் மக்கள் பிரச்சினைகளை பூர்த்தி செய்யாமல் கலவரம் ஏற்படுத்தி மத்திய அரசு ஆதாயம் தேடுகிறது.

    சேலம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நடைபெறும் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வேலையின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக பிரதமர் சொன்னார். ஆனால் மத்திய, மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

    மணிப்பூர் போன்ற விவகாரங்களில் மக்கள் பிரச்சினைகளை பூர்த்தி செய்யாமல் கலவரம் ஏற்படுத்தி மத்திய அரசு ஆதாயம் தேடுகிறது. நெல்லையில் தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. இது போன்ற கொலைகளுக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? என கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என ஆளுநர் பகிரங்கமாக அறிவிக்கிறார். ஆளுநர் அலுவலகம் பா.ஜ.க பிரசார அலுவலகம் போல செயல்படுகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அனிதா உள்பட 25 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனியாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்லூரிகளை காட்டிலும் நீட் பயிற்சி மையம் அதிகமாக உருவாகி உள்ளது.

    அமலாக்கத்துறை, வருமான வரித்துறைகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசோடு நெருக்கத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் பேசி தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கை கொண்டுவர வேண்டும். அண்ணாமலை பாதயாத்திரை செல்வதாக கூறி சொகுசு பயணமாக சென்று கொண்டிருக்கிறார். அதனால் எந்த பலனும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×