என் மலர்
சேலம்
- சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர்.
- அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர். இதையடுத்து அவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆட்டையாம்பட்டி போலீசார் 2 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர். அதில் வலசையூர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் (24), அம்மாப்பேட்டையை சேர்ந்த காஜாமைதீன் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.
பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆடு திருட வந்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அகில இந்திய நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்தது.
- 45 வகையான 425 நாய்கள் கலந்து கொண்டன.
சேலம்:
அகில இந்திய நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு சிறுமலர் பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்த கண்காட்சியில் பூனா, கோலாப்பூர், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், போபால், கொல்கத்தா, மற்றும் பல மாநிலங்களில் இருந்து பொமோரியன், டேஸ் ஹவுண்ட், பீகிள், ராடுவில்லர், டால்மேசன், கேன் கார்சோ, செயின்ட், கிரேடன், ராஜபாளையம், புல்டாக், சலூகி, பூடுல், ஐரிஸ்டிடம் உள்பட 45 வகையான 425 நாய்கள் கலந்து கொண்டன.
வெற்றி பெற்ற நாய்களுக்கு பழக்கம் வழங்கப்பட்டது. நடுவர்களாக டாசன், ஆண்டோனியா, ரஞ்சித், முன்ஜால் செயல்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தலைவர் விசு காளியப்பன் செயலாளர் சாந்தமூர்த்தி பொருளாளர் சீனிவாசன் துணைத் தலைவர்கள் நடராஜ், பிரகாஷ், இணைச் செயலாளர் மோகன்ராஜ், அண்ணாதுரை மற்றும் பலர் செய்திருந்தனர்.
- விளை பொருட்களையும் கொண்டு வந்து தானிய கிடங்காகவும் பயன்படுத்தி கொள்ளவும், அதனை விற்பனை செய்வதற்காகவும் பெரிதும் உறுதுணையாகவும் செயல்பட்டு வருகிறது.
- ஒரே நாளில் 28 விவசாயிகள் 421 மூட்டைகளில் 174.84 குவிண்டால் அளவிற்கு விவசாயிகள் தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர்.
ஓமலூர்
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மேச்சேரி பிரிவு ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
இது ஓமலூர் தாலுக்கா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களான நெல், சோளம், கம்பு, ராகி, துவரை, உளுந்து, நிலக்கடலை, பருத்தி மற்றும் தேங்காய் பருப்பு உள்ளிட்ட விளை பொருட்களையும் கொண்டு வந்து தானிய கிடங்காகவும் பயன்படுத்தி கொள்ளவும், அதனை விற்பனை செய்வதற்காகவும் பெரிதும் உறுதுணையாகவும் செயல்பட்டு வருகிறது.
மேலும் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை ஏலம் விட்டு உரிய நேரத்தில் பணமும் வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 28 விவசாயிகள் 421 மூட்டைகளில் 174.84 குவிண்டால் அளவிற்கு விவசாயிகள் தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தம் 12 லட்சத்து 70 ஆயிரத்து 8 ரூபாய் 75 காசுகளுக்கு ஏலம் போனது.
இந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக ரூ.77-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60 -க்கும், சராசரி விலையாக ரூ.75-க்கும் விற்பனையானது.
- சேலம் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- உழவர் சந்தைகளுக்கும் ஞாயிற்றுக்கி ழமையான இன்று காய்கறி வரத்து அதிகரித்து காணப்பட்டது.
சேலம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி மற்றும் காய்கறி விலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக தக்காளி விலை அதிக பட்சமாக 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தக்காளி வாங்கு வதையே நிறுத்தி விட்டனர். மேலும் சிலர் கிலோ கணக்கில் வாங்கி சென்ற தக்காளியை கிராம் கணக்கில் வாங்கி சென்றனர். இதே போல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி மற்றும் காய்கறி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது. செவ்வாய்ப்பேட்டை பால்மார்க்கெட், திருமணி முத்தாறு ஆற்றோர மார்க்கெட் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கும் ஞாயிற்றுக்கி ழமையான இன்று காய்கறி வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் விலையும் குறைந்தது.
தக்காளி
முதல் ரக தக்காளி இன்று கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மீண்டும் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கி சென்ற னர். இதே போல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்பட்டது. அவற்றின் விலை கிலோ கணக்கில் வருமாறு:-
உருளைக் கிழங்கு ரூ.32-64, சின்ன வெங்காயம் ரூ.38, பெரிய வெங்காயம் ரூ.34-38, பச்சை மிளகாய் ரூ.42-45, கத்தரி ரூ.18-20, வெண்டைக்காய் ரூ.16-18, முருங்கைகாய் ரூ.20-30, பீர்க்கங்காய் ரூ.25-30, சுரக்காய் ரூ.20-22, புடலங்காய் ரூ.20-22, பாகற்காய் ரூ.30-32, தேங்காய் ரூ.25-28, முள்ளங்கி ரூ.14-16, பீன்ஸ் ரூ.80-90, அவரை ரூ.45-50, கேரட் ரூ.58-60, வாழைப்பழம் ரூ.30-45, கீரைகள் ரூ.20-24, பப்பாளி ரூ.20-24, கொய்யா ரூ.30-40, ஆப்பிள் ரூ.180-200, சாத்துக்குடி ரூ.70.
- 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியி டங்கள் மற்றும் தீயணைப்பு துறையில் 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் நேற்று தமிழகம் முழுவதும் எழுத்து தேர்வு
- புறநகர் பகுதியில் 5 ஆயிரத்து 892 பேர் தேர்வு எழுதினர்
சேலம்
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியி டங்கள் மற்றும் தீயணைப்பு துறையில் 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் நேற்று தமிழகம் முழுவதும் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வு சேலம் மாவட்டத்தில் 10 மையங்க ளில் நடந்தது. தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 564 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் சேலம் மாநகரில் 2 ஆயிரத்து 30 பேர் தேர்வு எழுதினர். 359 பேர் தேர்வு எழுத வர வில்லை. இதேபோல் சேலம் புறநகர் பகுதியில் 5 ஆயிரத்து 892 பேர் தேர்வு எழுதினர். 1283 பேர் தேர்வு எழுத வர வில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது.
தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள் பலத்த பாதுகாப்புடன் சேலம் ஆயுதப்படை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்டிராங் அறையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளது.
போலீசாருக்கு தேர்வு
இதே போல் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு காவல் துறையில் பணி யாற்றி வரும் போலீசாருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அந்த வகையில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல் துறையில் 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஆண் போலீசார் 1049 பேரும், பெண் போலீசார் 274 பேரும் என மொத்தம் 1323 போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் பணிக்கான எழுத்து தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று சேலம் வைஸ்யா கல்லூரியில் நடந்தது. தேர்வுக்கு வந்த போலீசார் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனும திக்கப்பட்டனர்.
மேலும் அவர்களின் அடையாள அட்டை, மற்றும் ஹால்டிக்கெட்டும் தீவிர மாக கண்காணிக் கப்பட்டது. மேலும் தேர்வு அறையில் கண்காணிப்பு கேமிராவும் பொருத்தப்பட்டு இருந்தது.
இதில் ஆண் போலீசார் 887 பேரும், பெண் போலீசார் 162 பேரும் என மொத்தம் 1049 போலீசார் தேர்வு எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த ஆண் போலீசார் 222 பேர், பெண் போலீசார் 52 பேர் உள்பட 274 தேர்வு எழுத வரவில்லை.
இந்த தேர்வை சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் கண்காணித்து பார்வையிட்டனர்.
- மாநகரின் பல்வேறு இடங்களிலும் ஆங்காங்கே மீன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கடந்த வாரம் ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வஞ்ஜிரம் மீன் இன்று விலை குறைந்து ரூ.700க்கு விற்கப்பட்டு வருகிறது.
சேலம்
சேலத்தில் சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை, வ.உ.சி.மார்க்கெட் பின்புறம் ஆகிய இடங்களில் மீன் மார்க்ெகட் இயங்கி வரு கிறது. இதுதவிர மாநகரின் பல்வேறு இடங்களிலும் ஆங்காங்கே மீன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்க்கெட்டு களில் தினமும் மற்ற இடங்களில் புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே மீன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சேலத்துக்கு ராமேஸ்வரம், தூத்துக்குடி, சென்னை, மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இருந்து கடல் மீன்களும், மேட்டூர் அணை மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இன்று மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் கார ணமாக மீன்களின் விலை யும் குறைந்து காணப்பட்டது.
கடந்த வாரம் ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வஞ்ஜிரம் மீன் இன்று விலை குறைந்து ரூ.700க்கு விற்கப்பட்டு வருகிறது. இதே போல் கடந்த வாரம் கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட வாவ்வல் இன்று ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் சங்கரா, கொடுவா, லோகு, கட்லா, மத்தி மீன்களின் விலையும் குறைந்து காணப்பட்டது.
நெத்திலி மீன் கிலோ ரூ. 220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, கடந்த வாரத்தை விட மீன்களின் வரத்து அதிகரித்து இருப்ப தால் இன்று மீன்களின் விலை குறைந்து காணப்பட் டது. விலை குறைந்து காணப்பட்டாலும் விற்பனை மந்தமாகவே உள்ளது என்றனர்.
- சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்காடு:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது. மிகவும் சிக்கனமான மலைவாச தலமாகும். எனவே இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது.
ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். தற்போது வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள்.
மேலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தில் குவிந்தனர். அங்கு மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்றவாறு சிலு சிலு காற்றுடன் இயற்கை காட்சிகளை ரசித்தனர். சுற்றுலா பயணிகள் அழகு சாதன பொருட்கள், அழகு செடிகள் உள்ளிட்டவைகளும் வாங்கிச் சென்றனர்.
விடுமுைற தினத்தையொட்டி இன்று சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்ததால் அங்குள்ள கடைகளில் விற்பனை களை கட்டியது.
- அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள், பாறைகள் ஆங்காங்கே வெளியே தெரிகிறது.
- இன்று காலை நிலவரப்படி அணையில் 20.22 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகு திகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலையில் வினாடிக்கு 6 ஆயிரத்து 266 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 3 ஆயிரத்து 423 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.
தற்போது அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி டெல்டா பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை முதல் நீர் திறப்பு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரை விட அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் தினமும் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று காலையில் 54.42 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 53.70 அடியாக சரிந்தது.
இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ் வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை தற்போது முழு மையாக வெளியே தெரிகிறது.
அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள், பாறைகள் ஆங்காங்கே வெளியே தெரிகிறது. சில இடங்களில் வறண்டும், நிலப்பகுதி பாளம், பாளமாக வெடித்தும் காணப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையில் 20.22 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. இதில் இன்னும் 14.70 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும். மீதியுள்ள தண்ணீர் குடிநீர், மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.
அணையில் நீர்மட்டம் குறைந்ததால் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- ஆண்டும் மேஜர் தயான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ந் தேதி தேசிய விளையாட்டு நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 29-ந் தேதி காலை 9 மணியளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அதிகாரி சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மேஜர் தயான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ந் தேதி தேசிய விளையாட்டு நாளாக நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.
இந்த தேசிய விளையாட்டு தினத்தினை சிறப்பிக்கும் வகையில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 29-ந் தேதி காலை 9 மணியளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
19, 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் வீரர்களுக்கு கையுந்துபந்து, 100 மீட்டர் ஓட்ட போட்டி நடக்கிறது. 45 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 1 மீட்டர் நடை பயணம், 50 மீ, 100 மீ ஓட்டம், கேரம் ஆகியவை நடக்கிறது.
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் போட்டி அன்று தங்கள் பெயர்களை பதிவு செய்து நேரடியாக கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
- மேட்டூர் அணை பூங்காவிலும் காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனியப்பனை தரிசனம் செய்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.
சேலம்:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்ைட மாநி லங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுல ாபயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
ஏற்காட்டில் குவிந்தனர்
அதன்படி சனிக்கிழமையான இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். குடும்பம், குடும்பமாகவும், காதல் ஜோடிகளும் அதிக அளவில் வாகனங்களில் ஏற்காட்டிற்கு வந்தனர்.
இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, மீன் பண்ணை, சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், படகு குழாம் உள்பட பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக படகு குழாமில் குடும்பத்துடன் உற்சாகமாக சவாரி சென்று மகிழ்ந்தனர்.
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் தங்கும் விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி காட்சி அளித்தன. இதனால் லாட்ஜ் உரிமையா ளர்கள் மற்றும் வியாபாரி கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உயிரியல் பூங்கா
இேத போல குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள குரங்குகள், மயில்கள், மான்கள், பாம்புகள், பறவைகளையும் பார்த்து மகிழ்ந்தனர்.சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை பூங்காவிலும் காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனியப்பனை தரிசனம் செய்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.
மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊஞ்சல் ஆடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். அங்குள்ள் பாம்புகள், முதலைகளையும் பார்வை யிட்டனர். அணையின் பவள விழா கோபுரத்திற்கும் சென்று அணையின் அழகை பார்த்து ரசித்தனர். காவிரியி லும் குடும்பத்துடன் உற்சாக மாக ள குளித்து மகிழ்ந்தனர்.
- கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டது.
- தற்கொலை குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவரது மனைவி நித்யா (23) இவர்களுக்கு சசிபிரியா (9) அஸ்விதாஸ்ரீ (8) மோகனா (5) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக நித்யா அரளி விதைகளை அரைத்து குளிர்பானத்தில் தனது 3 குழந்தைகளுக்கும் கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதுபற்றி தெரியவந்ததும் 4 பேரையும் மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக நித்யா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சுப்ரமணி சாலையோரம் தங்கி குப்பை, காகிதங்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.
- குப்பை சேகரித்துக் கொண்டிருந்த சுப்பிரமணி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் தூக்கணாம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (60). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சுப்ரமணி சாலையோரம் தங்கி குப்பை, காகிதங்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாதையன்குட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி அருகே குப்பை சேகரித்துக் கொண்டிருந்த சுப்பிரமணி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சுப்பிரமணி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் மேட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.






