மேட்டூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

சுப்ரமணி சாலையோரம் தங்கி குப்பை, காகிதங்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.குப்பை சேகரித்துக் கொண்டிருந்த சுப்பிரமணி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
மேட்டூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் தூக்கணாம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (60). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சுப்ரமணி சாலையோரம் தங்கி குப்பை, காகிதங்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாதையன்குட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி அருகே குப்பை சேகரித்துக் கொண்டிருந்த சுப்பிரமணி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சுப்பிரமணி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் மேட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com