என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேச்சேரி வேளாண் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.12 லட்சத்து 70 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்புகள் ஏலம்
    X

    மேச்சேரி வேளாண் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.12 லட்சத்து 70 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்புகள் ஏலம்

    • விளை பொருட்களையும் கொண்டு வந்து தானிய கிடங்காகவும் பயன்படுத்தி கொள்ளவும், அதனை விற்பனை செய்வதற்காகவும் பெரிதும் உறுதுணையாகவும் செயல்பட்டு வருகிறது.
    • ஒரே நாளில் 28 விவசாயிகள் 421 மூட்டைகளில் 174.84 குவிண்டால் அளவிற்கு விவசாயிகள் தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர்.

    ஓமலூர்

    சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மேச்சேரி பிரிவு ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

    இது ஓமலூர் தாலுக்கா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களான நெல், சோளம், கம்பு, ராகி, துவரை, உளுந்து, நிலக்கடலை, பருத்தி மற்றும் தேங்காய் பருப்பு உள்ளிட்ட விளை பொருட்களையும் கொண்டு வந்து தானிய கிடங்காகவும் பயன்படுத்தி கொள்ளவும், அதனை விற்பனை செய்வதற்காகவும் பெரிதும் உறுதுணையாகவும் செயல்பட்டு வருகிறது.

    மேலும் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை ஏலம் விட்டு உரிய நேரத்தில் பணமும் வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 28 விவசாயிகள் 421 மூட்டைகளில் 174.84 குவிண்டால் அளவிற்கு விவசாயிகள் தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தம் 12 லட்சத்து 70 ஆயிரத்து 8 ரூபாய் 75 காசுகளுக்கு ஏலம் போனது.

    இந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக ரூ.77-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60 -க்கும், சராசரி விலையாக ரூ.75-க்கும் விற்பனையானது.

    Next Story
    ×