என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் முதல் அக்ரஹாரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கள் வாங்கிய மக்கள்.
சேலம் மார்க்கெட்டுகளில் காய்கறி விலை குறைந்தது
- சேலம் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- உழவர் சந்தைகளுக்கும் ஞாயிற்றுக்கி ழமையான இன்று காய்கறி வரத்து அதிகரித்து காணப்பட்டது.
சேலம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி மற்றும் காய்கறி விலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக தக்காளி விலை அதிக பட்சமாக 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தக்காளி வாங்கு வதையே நிறுத்தி விட்டனர். மேலும் சிலர் கிலோ கணக்கில் வாங்கி சென்ற தக்காளியை கிராம் கணக்கில் வாங்கி சென்றனர். இதே போல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி மற்றும் காய்கறி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது. செவ்வாய்ப்பேட்டை பால்மார்க்கெட், திருமணி முத்தாறு ஆற்றோர மார்க்கெட் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கும் ஞாயிற்றுக்கி ழமையான இன்று காய்கறி வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் விலையும் குறைந்தது.
தக்காளி
முதல் ரக தக்காளி இன்று கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மீண்டும் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கி சென்ற னர். இதே போல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்பட்டது. அவற்றின் விலை கிலோ கணக்கில் வருமாறு:-
உருளைக் கிழங்கு ரூ.32-64, சின்ன வெங்காயம் ரூ.38, பெரிய வெங்காயம் ரூ.34-38, பச்சை மிளகாய் ரூ.42-45, கத்தரி ரூ.18-20, வெண்டைக்காய் ரூ.16-18, முருங்கைகாய் ரூ.20-30, பீர்க்கங்காய் ரூ.25-30, சுரக்காய் ரூ.20-22, புடலங்காய் ரூ.20-22, பாகற்காய் ரூ.30-32, தேங்காய் ரூ.25-28, முள்ளங்கி ரூ.14-16, பீன்ஸ் ரூ.80-90, அவரை ரூ.45-50, கேரட் ரூ.58-60, வாழைப்பழம் ரூ.30-45, கீரைகள் ரூ.20-24, பப்பாளி ரூ.20-24, கொய்யா ரூ.30-40, ஆப்பிள் ரூ.180-200, சாத்துக்குடி ரூ.70.






