என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salemdistrict: 274 பேர் தேர்வு எழுத வரவில்லை 274 people did not come to write the exam"

    • 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியி டங்கள் மற்றும் தீயணைப்பு துறையில் 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் நேற்று தமிழகம் முழுவதும் எழுத்து தேர்வு
    • புறநகர் பகுதியில் 5 ஆயிரத்து 892 பேர் தேர்வு எழுதினர்

    சேலம்

    தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியி டங்கள் மற்றும் தீயணைப்பு துறையில் 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் நேற்று தமிழகம் முழுவதும் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வு சேலம் மாவட்டத்தில் 10 மையங்க ளில் நடந்தது. தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 564 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இதில் சேலம் மாநகரில் 2 ஆயிரத்து 30 பேர் தேர்வு எழுதினர். 359 பேர் தேர்வு எழுத வர வில்லை. இதேபோல் சேலம் புறநகர் பகுதியில் 5 ஆயிரத்து 892 பேர் தேர்வு எழுதினர். 1283 பேர் தேர்வு எழுத வர வில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது.

    தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள் பலத்த பாதுகாப்புடன் சேலம் ஆயுதப்படை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்டிராங் அறையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளது.

    போலீசாருக்கு தேர்வு

    இதே போல் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு காவல் துறையில் பணி யாற்றி வரும் போலீசாருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அந்த வகையில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல் துறையில் 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஆண் போலீசார் 1049 பேரும், பெண் போலீசார் 274 பேரும் என மொத்தம் 1323 போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் பணிக்கான எழுத்து தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

    இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று சேலம் வைஸ்யா கல்லூரியில் நடந்தது. தேர்வுக்கு வந்த போலீசார் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனும திக்கப்பட்டனர்.

    மேலும் அவர்களின் அடையாள அட்டை, மற்றும் ஹால்டிக்கெட்டும் தீவிர மாக கண்காணிக் கப்பட்டது. மேலும் தேர்வு அறையில் கண்காணிப்பு கேமிராவும் பொருத்தப்பட்டு இருந்தது.

    இதில் ஆண் போலீசார் 887 பேரும், பெண் போலீசார் 162 பேரும் என மொத்தம் 1049 போலீசார் தேர்வு எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த ஆண் போலீசார் 222 பேர், பெண் போலீசார் 52 பேர் உள்பட 274 தேர்வு எழுத வரவில்லை.

    இந்த தேர்வை சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் கண்காணித்து பார்வையிட்டனர்.

    ×