என் மலர்
ராணிப்பேட்டை
- கடன் தொல்லையால் விபரீதம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட மூலப்பட்டு கிராமம் காந்தி சாலை யில் வசித்து வருபவர் அன்பு (வயது 25). இஸ்திரி தொழில் செய்து வந்தார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், நிதிஷ், சாம் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
அன்பு, நெமிலி தட்டார தெருவில் தன் குடும்பத்தினரோடு வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு நந்தினி அம்பத் தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மாடி படிக்கட்டில் ரத்தம் வழிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் அன்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கடன் தொல்லையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்ப ட்டுவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து விழிப்புணர்வு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள தனியார் திரவநிலை எரிவாயு நிறுவனத்தின் சார்பில் தீ விபத்து தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி மாந்தாங்கல் கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்ப ட்டுவர்களுக்கு முதலுதவி அளிப்பது, மருத்துவமனைக்கு அனுப்புவது, குறித்தும் இயற்கை எரிவாயு நிறுவன பாதுகாப்பு துறையினர், மாவட்ட தீயணைப்புத்துறை, மாவட்ட நிர்வாகம், மருத்துவ துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, எரிவாயு நிறுவன மண்டல தலைவர் வெங்கடேசன், முதுநிலை பாதுகாப்பு பொறியாளர் தாமோதரன், அலுவலர்கள் பாலாஜி, இசக்கி ராஜாராம்,சுரேஷ்,ரவிதேஜா,தீயணைப்பு நிலை அலுவலர் பாலாஜி, மாந்தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவர் ரமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 710 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டடது
- ரூ.21 லட்சத்து 30 ஆயிரத்து 250-ஐ இழப்பீட்டு தொகை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நேற்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. லோக் அதாலத்தில் தீர்வு காண்பதற்காக மொத்தம் 710 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டடது.
இதில் வாலாஜா உலகளந்த பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி(75) இவருக்கு 2மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 24ந் தேதி காலை, மணி வாலாஜா -சோளிங்கர் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக வாலாஜா நோக்கி வந்த கார் மணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மணியின் மகன்கள் தந்தையின் இறப்பிற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு கேட்டு ராணிப்பேட்டை 2-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கீல் அண்ணாதுரை ஆஜரானார்.
இந்த வழக்கும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெயசூர்யா, விபத்தில் இறந்த மணியின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு அதற்கான ஆணையும் வழங்கினார்.
இந்த லோக் அதாலத் மூலம் 7 வாகன விபத்து வழக்குகள், ஒரு சிவில் வழக்கு மற்றும் 124 சிறு வழக்குகள் என மொத்தம் 132 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.21 லட்சத்து 30 ஆயிரத்து 250-ஐ இழப்பீட்டு தொகைகளாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
- வருகிற 16-ந் தேதி முதல் நடைபெறுகிறது
- 22-ந் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் 2022-2023ம் ஆண்டு பஞ்சாயத்து, நகராட்சி, ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 16-ந் தேதி முதல் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது.
அதன்படி வருகிற 16ந் தேதி காலை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு, 17-ந் தேதி கடந்த ஆண்டுகளில் பணிநிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை மீளத் தாய் ஒன்றியத்திற்கு ஈர்த்தல் நடைபெறுகிறது.
18-ந் தேதி கடந்த ஆண்டுகளில் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீளத் தாய் ஒன்றியத்திற்கு ஈர்த்தலும், 19-ந் தேதி பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்), 20-ந் தேதி இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்), 22-ந் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந் தாய்வு (ஒன்றியத்திற்குள்) நடைபெறுகிறது.
23-ந் தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வும், 24-ந் தேதி இடைநிலை ஆசிரியர் மாறு தல் கலந்தாய்வும் (ஒன்றியத்திற்குள்) நடைபெறுகிறது என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராணிப்பேட்டையில் வருகிற 16-ந்தேதி நடக்கிறது
- அதிகாரி தகவல்
ராணிப்பேட்டை:
வேலூர் மின் பகிர்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தில் மாதம் தோறும் 3-வது செவ்வாய்க்கிழமைகளில் மின் நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம் ராணி ப்பேட்டை மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மே மாதத்திற்கான கூட்டம் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை, வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அருணாசலம் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தை மின் நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு, ராணிப்பேட்டை மின்சார வாரிய செயற்பொறியாளர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை
- அனைத்து நர்சரி மையங்களிலும் செடிகள் வளர்க்க நடவடிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
அவர் பேசியதாவது:-
நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் பணிகள் மிகவும் மந்த நிலையில் இருந்து வருகிறது. அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஊராட்சி மன்றத் தலைவர்களும் இணைந்து பணிகளை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூன் 15 வரை இப்பணிகள் நடைபெற உள்ளது. இந்த திட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்திடவும், மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு குப்பைகளை தரம் பிரித்து வழங்கிடவும், கிராமத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்தும் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை செய்ய வேண்டும்.
புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வகுப்பறை கட்டிடப் பணிகள், சமையலறை புனரமைக்கும் மற்றும் புதிதாக அமைக்கும் பணிகள் கால இடைவெளி தேவைப்படுவதால் வருகிற ஜூன் 30-ந் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இப்பணிகள் நல்ல முறையில் மேற்கொள்ளவும், விரைவாகவும் தரமாகவும் கட்ட உத்தரவிட்டார்கள்,
நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சமத்துவபுரம் வீடு கட்டும் பணிகள் ஜூன் 30-க்குள் முடித்திருக்க வேண்டும். இவைகளில் தொய்வு இருக்கக் கூடாது.
மே மாதத்திற்குள் அனைத்து நர்சரி மையங்களிலும் செடிகள் வளர்க்க நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும். 5 அடி வரை செடிகள் கட்டாயம் வளர்ந்து இருக்க வேண்டும்.
ஜூன், ஜூலையில் இச்செடிகளை நடவு செய்திட இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது. ஆகவே இவற்றை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மிஷின் அந்தியோதயா திட்டம் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நடப்பு நிதி ஆண்டில் 15-வது நிதி திட்டத்தில் தேவைப்படும் பணிகள் குறித்த திட்ட அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்த மாத ஆய்வுக்கு முன் நிலுவையில் உள்ள பணிகள் கட்டாயம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, செயற்பொறியாளர் முத்துசாமி,உதவி இயக்குனர் ஊராட்சிகள் திருகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்,
- போலீஸ் விசாரணை
- யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை
ஆற்காடு:
ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலை பஜார் வீதி யில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாய் உள்ளது.
இந்த கால்வா யில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றபோலீ சார் கால்வாயில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத் துவமனைக்கு அனுப்பிவைத் தனர். இறந்த நபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை.
குடிபோதையில் விழுந் தாரா அல்லது வேறு ஏதே னும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாசில்தார் தகவல்
- அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது
நெமிலி:
தாலுகா அலுவலகங்கள் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மற்றும் சமூக பாதுகாப்பு நலத்திட்ட உதவிகளான ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நெமிலி தாலுகா அலுவலக வளாகத் தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஆனந்தன் கூறியதாவது:-பொதுமக்கள் அனைவரும் அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ளவேண்டும். சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பெற இடைத்தரகர் களை நம்பி ஏமாறாமல் இருக்கவேண்டும்.
நலத்திட்டங்கள் பெற என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை பொதுமக் கள் அறிந்துகொள்ளவே இந்த விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
- பைக் பறிமுதல்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் மங்கம்மா பேட்டை பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.
அப் போது ஒரே மோட்டார் சைக் கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தினர். சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந் தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த ரியாஸ் அஹமது (வயது 22), அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த விஜய குமார் (21), மங்கமாபேட்டை பகுதியை சேர்ந்த மணிகண் டன் (18) என்பது தெரியவந் தது. அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற் றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
- 5 ரூபாய் நாணயங்கள் செலுத்தி ஒரு மஞ்சப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் விற்பனைக்காக கொண்டு வரும் காய்கறிகள், பழங்கள், மலர்கள் ஆகியவை விற்பனை போக மீதம் இருப்பதை சேமித்து வைக்கவும்,பொருட்கள் கெட்டுப் போகாமலும் , சேதமடையாமலும் சேமித்து மறு விற்பனை செய்ய வாய்ப்பாக ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சூரிய சக்தியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், விற்பனையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் இந்த குளிர்பதன கிடங்கிற்கான திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குளிர் பதன கிடங்கை திறந்து வைத்தார்.
மேலும் உழவர் சந்தை வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் , முருகப்பா மார்கன் தெர்மல் செராமிக்ஸ் தொழிற்சாலையின் சமுதாய சேவை நிதி திட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பைகள் வழங்கும் எந்திரத்தையும் அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் .
இந்த தானியங்கி மஞ்சப்பைகள் வழங்கும் எந்திரத்தில் பத்து ரூபாய் நாணயம் அல்லது ரூபாய் நோட்டு அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயங்கள் செலுத்தி ஒரு மஞ்சப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- போலீசார் விசாரணை
- ஒரு கிலோ 200 கிராம் அடங்கிய கஞ்சா பொட்டலம் பறிமுதல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே விற்பனைக்காக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருப்பதாக ராணிப்பேட்டை கலால் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் ராணிப்பேட்டை, பொன்னை சாலையில் அக்ராவரம் பகுதியில் உள்ள ரெயில்வே பாலம் அருகில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராணிப்பேட்டை காரையைச் சேர்ந்த ஜுஜிலி என்ற பிரதீப் குமார் (26), அம்மூர் சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் (23), வாலாஜா அடுத்த மேல் புதுப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் (22) என தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் அடங்கிய கஞ்சா பொட்டலமும், 20 போதை மாத்திரைகளும் இருப்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அந்த 3வாலிபர்களையும் கைது செய்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.12 ஆயிரத்து 672 என கலால் போலீசார் தெரிவித்தனர்.
- விவசாயிகள் வளர்ப்பதற்கு 2 ஆடுகள் வழங்கப்படும்
- அதிகாரி தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆட்டுப்பண்ணை மற்றும் அரசு கால்நடை ஆய்வாளர்கள் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.
40 ஏக்கர் பரப்பளவில் இந்த பண்ணையில் 377 ஆடுகளும், 10 ஏக்கர் பரப்பளவில் தீவனமும் வளர்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கலெக்டர் வளர்மதி நேற்று திடீரென ஆட்டு ப்பண்ணையில் ஆய்வு செய்து பண்ணையில் வளர்க்கப்படும் ஆடுகளை பார்வையிட்டார்.
ஆடுகளுக்கு வழங்கப்படும் தீவனங்கள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது ஆட்டுபண்ணை உதவி இயக்குனர் ஸ்ரீதர் பாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆட்டு பண்ணையில் விவசாயிகள் வளர்ப்பதற்கு ஆடுகள் தேவைப்பட்டால் உரிய ஆவணங்களுடன் வந்து எடைக்கு ஏற்றார் போல், உரிய விலைக்கு 2 ஆடுகள் வழங்கப்படு வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.






