என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீளத் தாய் ஒன்றியத்திற்கு ஈர்த்தல் நடைபெறும்"

    • வருகிற 16-ந் தேதி முதல் நடைபெறுகிறது
    • 22-ந் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் 2022-2023ம் ஆண்டு பஞ்சாயத்து, நகராட்சி, ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 16-ந் தேதி முதல் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 16ந் தேதி காலை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு, 17-ந் தேதி கடந்த ஆண்டுகளில் பணிநிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை மீளத் தாய் ஒன்றியத்திற்கு ஈர்த்தல் நடைபெறுகிறது.

    18-ந் தேதி கடந்த ஆண்டுகளில் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீளத் தாய் ஒன்றியத்திற்கு ஈர்த்தலும், 19-ந் தேதி பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்), 20-ந் தேதி இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்), 22-ந் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந் தாய்வு (ஒன்றியத்திற்குள்) நடைபெறுகிறது.

    23-ந் தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வும், 24-ந் தேதி இடைநிலை ஆசிரியர் மாறு தல் கலந்தாய்வும் (ஒன்றியத்திற்குள்) நடைபெறுகிறது என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×