என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 Vehicle accident case"

    • 710 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டடது
    • ரூ.21 லட்சத்து 30 ஆயிரத்து 250-ஐ இழப்பீட்டு தொகை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நேற்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. லோக் அதாலத்தில் தீர்வு காண்பதற்காக மொத்தம் 710 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டடது.

    இதில் வாலாஜா உலகளந்த பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி(75) இவருக்கு 2மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 24ந் தேதி காலை, மணி வாலாஜா -சோளிங்கர் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக வாலாஜா நோக்கி வந்த கார் மணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மணியின் மகன்கள் தந்தையின் இறப்பிற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு கேட்டு ராணிப்பேட்டை 2-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கீல் அண்ணாதுரை ஆஜரானார்.

    இந்த வழக்கும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெயசூர்யா, விபத்தில் இறந்த மணியின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு அதற்கான ஆணையும் வழங்கினார்.

    இந்த லோக் அதாலத் மூலம் 7 வாகன விபத்து வழக்குகள், ஒரு சிவில் வழக்கு மற்றும் 124 சிறு வழக்குகள் என மொத்தம் 132 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.21 லட்சத்து 30 ஆயிரத்து 250-ஐ இழப்பீட்டு தொகைகளாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

    ×