என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் குளிர் பதன கிடங்கு, தானியங்கி மஞ்சப்பை எந்திரம்
- அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
- 5 ரூபாய் நாணயங்கள் செலுத்தி ஒரு மஞ்சப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் விற்பனைக்காக கொண்டு வரும் காய்கறிகள், பழங்கள், மலர்கள் ஆகியவை விற்பனை போக மீதம் இருப்பதை சேமித்து வைக்கவும்,பொருட்கள் கெட்டுப் போகாமலும் , சேதமடையாமலும் சேமித்து மறு விற்பனை செய்ய வாய்ப்பாக ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சூரிய சக்தியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், விற்பனையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் இந்த குளிர்பதன கிடங்கிற்கான திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குளிர் பதன கிடங்கை திறந்து வைத்தார்.
மேலும் உழவர் சந்தை வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் , முருகப்பா மார்கன் தெர்மல் செராமிக்ஸ் தொழிற்சாலையின் சமுதாய சேவை நிதி திட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பைகள் வழங்கும் எந்திரத்தையும் அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் .
இந்த தானியங்கி மஞ்சப்பைகள் வழங்கும் எந்திரத்தில் பத்து ரூபாய் நாணயம் அல்லது ரூபாய் நோட்டு அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயங்கள் செலுத்தி ஒரு மஞ்சப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.






