என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • போக்குவரத்து நெரிசல் குறைவான நேரத்தில் பொருட்களை இறக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்
    • போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து வியாபாரிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நெமிலி தாசில்தார் பாலசந்தர் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பள்ளி, அலுவலக காலை வேலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

    ஆதலால் வணிக பொருட்களை ஏற்றிவரும் லாரிகளுக்கு போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் நேரங்களில் பொருட்களை இறக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

    போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் கடைகளை நடத்தவேண்டும்.

    கடைக்கு வருபவர்கள் வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்த ஆலோசனை வழங்கவேண்டும்.

    மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குட்கா, போதை பொருட்களை யாராவது விற்பனை செய்தால் பொதுமக்கள் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, வியாபாரிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க சார்பில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று இரவு முத்துக்கடை பஸ் நிலையத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

    பட்டிமன்றத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

    கருணாநிதியின் நிலைத்த புகழுக்கு காரணம் இலக்கிய பணியே, மக்கள் பணியே என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் இலக்கிய பணியே என்ற தலைப்பில் ராஜ்குமார், கவிதா ஜவகர், மக்கள் பணியே என்ற தலைப்பில் ரேவதி சுப்புலட்சுமி, கருணாநிதி ஆகியோர் பேசினர்.

    புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடுவராக பங்கேற்று கருணாநிதியின் மக்கள் பணிகள் நினைவில் இருக்கும், இலக்கிய பணி நிலைத்து இருக்கும் எனவே நிலைத்து நிற்கும் இலக்கிய பணியே சிறந்தது என தீர்ப்பு வழங்கினார்.

    இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, எம்.எல்.ஏ, ஈஸ்வரப்பன் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, ஒன்றியக்குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகர செயலாளர் பூங்காவனம் உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.4,37,430 மதிப்பில் வீடு அமைகிறது
    • சோளிங்கர் ஒன்றிய அலுவகத்தில் நிகழ்ச்சி நடந்தது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளத்தேரி சித்தாதூரை சேர்ந்த ரஜினி என்பவருக்கு பழங்குடியினர் நல திட்டம் நிதியில் இருந்து ரூ.4,37,430 மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சோளிங்கர் ஒன்றிய அலுவகத்தில் நடந்தது.

    ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வஜ்ரவேல், சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் மாரிமுத்து, ராமன், முனியம்மாள் பிச்சாண்டி, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி அறிவுறுத்தலின் பேரில் நெமிலி போலீசார் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு போதை பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு, ஊராட்சி மன்ற தலைவர் அம்மு தட்சிணாமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் விநாயகம், பள்ளி ஆசிரியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரபாபு (வயது 38). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தவர் இரவு தடுமாறி கீழே விழுந்தார்.

    படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் ேசர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சந்திரபாபு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீன் பிடிக்கும் தகராறில் விபரீதம்
    • 4 பேர் கைது

    நெமிலி:

    நெமிலி அருகே பேனர் கடை உரிமையாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் என்கிற பிரபு (வயது 40). இவர் காஞ்சிபுரத்தில் டிஜிட்டல் பேனர் பிரின்டிங் கடை நடத்திவந்தார்.

    இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், ருதேஷ், வேதேஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். லாரன்ஸ் நேற்று கீழ் வீதி கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர், லாரன்ஸை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    உறவினர்கள் ஏரிப் பகுதியில் சென்று லாரன்சை தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கீழ்வீதி ஏரிக்கு செல்லும் வழியில், லாரன்ஸ் தலையில் காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த லாரன்ஸ் குடும்பத்தினர், அவர் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ்கிரிஷ் அசோக், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் லாரன்ஸ் மற்றும் கீழ் வீதி கிரமத்தை சேர்ந்த ராமதாஸ் (32), தங்கராஜ் (23), தங்கராசு (22), தீபக் (24) ஆகியோருக்கும் ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றியதில் ராமதாஸ், தங்கராஜ், தங்கராசு, தீபக் ஆகியோர் சேர்ந்து இரும்பு ராடால் லாரன்சை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமதாஸ், தங்கராஜ், தங்கராசு, தீபக் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    சோளிங்கர் தாலுகா, கீழ் கரடிகுப்பம் கிராமம் 1-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் கிருஷ்ணகாந்த்(21) காண்டிராக் முறையில் செண்டிரிங் வேலை செய்து பார்த்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணகாந்த் வாலாஜாவிலிருந்து ஆற்காடு நோக்கி செல்வதற்காக, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    ராணிப்பேட்டை பாலாறு பாலம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ண்காந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் கிருஷ்ணகாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
    • ரூ.19.20 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையகண்டிகை கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி ஆகியோர் முன்னணிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரூ.13.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியினை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அசநெல்லி குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.19.20 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

    பின்னர் நெல்வாய் கண்டிகை கிராமத்தில் பள்ளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நடமாடும் ரேஷன் கடையை திறந்து வைத்து விற்பனையினை தொடங்கி வைத்தார்.

    இதில் நெமிலி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், நெமிலி தாசில்தார் பாலசந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், பாஸ்கரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பி.ரவீந்திரன், எஸ்.ஜி.சி.பெருமாள், ஒன்றியகுழு உறுப்பினர்கள் சங்கீதா கதிரவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சேகர் (அசநெல்லிகுப்பம்), ரேணுகாம்பாள் (நெல்வாய்) பலர் கலந்துகொண்டனர்.

    • பங்கேற்க 650 பேர் சென்னை பயணம்
    • கலெக்டர் வழியனுப்பி வைத்தார்

    ராணிப்பேட்டை:

    மாணவிகள், பொதுமக்கள் ஜூன்.30- மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 12,943 பேர் கலந்து 2,079 பேர் வெற்றி பெற்றனர். இதில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ- சென்னையில் இன்று ராணிப்பேட்டைமாவட்டத் தில் கடந்த 15.2.2023 முதல் கொண்டனர். அவர்களில் 3.3.2023 வரை முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகள் நடை பெற்றது. இப்போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 650 பேர் வெள்ளிகிழமை முதல் 14-ந் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள்.

    அவர்களை ராணிப் பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வாழ்த்தி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து பஸ் மூலம் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற் றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
    • குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி சுற்றுவட்டார பகுதி களில் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்ததால் பொது மக்கள் அவதிப்பட்டனர். அதைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் நெமிலி, சயனபுரம், ஆட்டுபாக்கம், திருமால்பூர், பள்ளூர், பனப்பாக்கம், வேட்டாங்குளம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தாழ்வான நபகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 7 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

    • மற்றொரு மாணவி உயிருடன் மீட்பு
    • இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட் டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த முசிறி கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மோனிகா (வயது 14). வள்ளுவம்பாக்கம் அரசு உயர் நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலை யில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியில் வசிக்கும் அவரது தோழியான, குப்பன் என்பவரின் மகள் செல்வராணி (9) என்பவரோடு அருகில் உள்ள ஏரியில் விளையாட சென்றுள்ளார்

    அங்கு விளையாடிகொண் டிருந்தபோது எதிர்பாராத விதமாக இருவரும் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில்

    மூழ்கி தத்தளித்து கொண்டி ருந்தனர். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டனர்.

    ஆனால் மோனிகா பரிதாப மாக இறந்துவிட்டார். உயி ருக்கு போராடிக்கொண்டி ருந்த செல்வராணி வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். பின்னர் மேல்சிகிச் சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து காவேரிப்பாக் கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர். இந்த சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒன்றிய குழு கூட்டம்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

    ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ர மணன் தலைமை தாங்கி பேசினார்.துணைத்த லைவர் ராதாகி ருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் வாலாஜா ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் பயிற்சி மையம் அமைத்திட போதுமான இடம் உள்ளது,

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்கும், டி.என்.பி.எஸ்.சி உள்பட போட்டி தேர்வுகளில் வெற்றி பெறும் வண்ணம் சிறப்பு பயிற்சி வழங்க பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

    அந்த பயிற்சி மையத்திற்கு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நினைவு பயிற்சி மற்றும் வழிகாட்டி மையம் என பெயர் சூட்ட வேண்டும்.

    வாலாஜா ஒன்றியத்தில் தனியார் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தில் கட்டப்பட்டு வரும் 19 கிராம துணை சுகாதார நிலைய கட்டிடங்களுக்கும் முன்னால் முதல்வர் பெயர் சூட்ட வேண்டும்.

    ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் சிமெண்ட் சாலை, தார் சாலை, கழிவு நீர் கால்வாய்கள், பைப் லைன்கள் அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி உள்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×