என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opening ceremony Community-verified icon Verified"

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
    • ரூ.19.20 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையகண்டிகை கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி ஆகியோர் முன்னணிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரூ.13.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியினை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அசநெல்லி குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.19.20 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

    பின்னர் நெல்வாய் கண்டிகை கிராமத்தில் பள்ளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நடமாடும் ரேஷன் கடையை திறந்து வைத்து விற்பனையினை தொடங்கி வைத்தார்.

    இதில் நெமிலி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், நெமிலி தாசில்தார் பாலசந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், பாஸ்கரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பி.ரவீந்திரன், எஸ்.ஜி.சி.பெருமாள், ஒன்றியகுழு உறுப்பினர்கள் சங்கீதா கதிரவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சேகர் (அசநெல்லிகுப்பம்), ரேணுகாம்பாள் (நெல்வாய்) பலர் கலந்துகொண்டனர்.

    ×