பேனர் கடை உரிமையாளர் அடித்து கொலை

மீன் பிடிக்கும் தகராறில் விபரீதம் 4 பேர் கைது
பேனர் கடை உரிமையாளர் அடித்து கொலை
Published on

நெமிலி:

நெமிலி அருகே பேனர் கடை உரிமையாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் என்கிற பிரபு (வயது 40). இவர் காஞ்சிபுரத்தில் டிஜிட்டல் பேனர் பிரின்டிங் கடை நடத்திவந்தார்.

இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், ருதேஷ், வேதேஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். லாரன்ஸ் நேற்று கீழ் வீதி கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர், லாரன்ஸை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

உறவினர்கள் ஏரிப் பகுதியில் சென்று லாரன்சை தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கீழ்வீதி ஏரிக்கு செல்லும் வழியில், லாரன்ஸ் தலையில் காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த லாரன்ஸ் குடும்பத்தினர், அவர் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ்கிரிஷ் அசோக், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் லாரன்ஸ் மற்றும் கீழ் வீதி கிரமத்தை சேர்ந்த ராமதாஸ் (32), தங்கராஜ் (23), தங்கராசு (22), தீபக் (24) ஆகியோருக்கும் ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் ராமதாஸ், தங்கராஜ், தங்கராசு, தீபக் ஆகியோர் சேர்ந்து இரும்பு ராடால் லாரன்சை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமதாஸ், தங்கராஜ், தங்கராசு, தீபக் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com