என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பணிகளை நகராட்சி நிர்வாகம் முடித்துவிட்டு சென்றனர்
    • தர்ணாவில் ஈடுபட்டனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட 5-வது வார்டில் நகராட்சி நிர்வாகம் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கியது.

    இதில் அதே பகுதியில் வசிக்கும் கஸ்தூரி- ரங்கன் தம்பதியினர் தனது குடும்பத்தினருடன் நகராட்சி பணிகளை நிறுத்தி அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    மண் சாலையில் அமர்ந்து நகராட்சி பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களை தடுத்து நிறுத்தினார்.

    தகவல் அறிந்து உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, அமரேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். ஆணையருக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் முன்னிலையில் நடத்தினர்.

    பின்னர் இறுதியாக நீதிமன்ற தீர்ப்பின் பிறகு சாலைகளை அப்புறப்படுத்தி தருவதாக கூறினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 5 மணி நேரத்திற்கு பிறகு சாலை அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் முடித்துச்விட்டு சென்றனர் .

    • நாளை தொடங்குகிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுகளுடன் கூடிய தேசிய அடையாள அட்டை மற்றும் அனைத்து வயது நிரம்பிய மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான தேர்வு முகாம்கள் நடைபெற உள்ளது.

    நாளை 8-ந் தேதி திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வருகிற 12-ந் தேதி ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 15-ந் தேதி வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 16-ந் தேதி அரக்கோணம் ஜோதி நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 20-ந் தேதி சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 22-ந் தேதி நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 26ம் தேதி காவேரிப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,27-ந் தேதி ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் நடைபெறுகிறது.

    இதில் அனைத்து வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் தேவைப்படும் எனில் தங்களது அடையாள அட்டை நகல், மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை நகல், ரேசன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பெற்றிருந்தால் அதன் நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் 5 ஆகியவற்றுடன் முகாம்களில் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • போலீசாருக்கு டி.எஸ்.பி. உத்தரவு
    • இன்ஸ்பெக்டர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்ட காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அரக்கோணம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கான ஆய்வு கூட்டம் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. பிரபு தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் குற்ற வழக்குகள் குறைப்பது, கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து டி.எஸ்.பி., காவல் நிலைய அதிகாரிகளை கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்த வேண்டும் மேலும் போலீஸ் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இதில், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், லட்சுமிபதி, பாரதி, பழனிவேலன், பாரதி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நகராட்சி நிர்வாகம் நாளங்காடியை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
    • காந்தி சிலையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சி நாளங்காடி கட்டிடம் கடந்த 1949-ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதே நாளங்காடியின் நுழைவுவாயிலின் மாடியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது. அந்த நாளங்காடிக்கு காந்தி மார்க்கெட் என பெயரிடப்பட்டது.

    தொடர்ந்து 1984-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் நாளங்காடி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டப்பட்டபோது இந்த நுழைவு வாயில் பகுதி மட்டும் இடிக்கப்படாமல் சீரமைக்கப்பட்டது. இதனால் அந்த காந்தி உருவச்சிலை அதே இடத்தில் இருந்தது.

    இந்த சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள் காந்தி பிறந்தநாள், நினைவுநாள், குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

    தற்போது கட்டிடங்கள் கட்டி 39 ஆண்டுகள் ஆகியுள்ளதாலும், தற்போது பழுதாகி பயன்பாட்டிற்ககு உகந்த நிலை உள்ளது.

    இதனால் நகராட்சி நிர்வாகம் நாளங்காடியை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இதில் நாளங்காடியின் பின்பக்கம் இருந்த இறைச்சி விற்பனை பகுதி மட்டும் இடிக்கப்பட்ட நிலையில் மற்ற பகுதிகள் இடிக்கப்படவில்லை.

    இக்கட்டிடத்தில் வணிகம் செய்த வணிகர்கள் பலர் கடைகளை காலி செய்து தர தாமதம் செய்வதால் இடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று பிற்பகல் நகராட்சி நாளங்காடியின் நுழைவுப்பகுதிக்கு ஆட்டோவில் வந்த சிலர் மகாத்மா காந்தியின் உருவச்சிலையை பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

    காந்தியின் சிலை அகற்றப்பட் டது குறித்து அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது தங்களுக்கு இது குறித்து தெரியாது எனவும், சிலையை அகற்ற யாரிடமும் கூறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மர்ம நபர்கள் சிலையை திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. காந்தி சிலையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • இட பிரச்சினை காரணமாக முன்விேராதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிளைவ் பஜார் பகு தியைச் சேர்ந்தவர்கள் நவீன் (வயது 26), ராஜேஷ் (42), சாமு வேல் (42). இவர்களுக்குள் இடம் பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாமுவேல், நவீன், ராஜேஷ் ஆகியோருக்குள் தகராறு ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் தகராறு முற்றி சாமுவேல் கத்தியால் நவீன், ராஜேஷ் ஆகிய இருவரையும் குத்தி உள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த இருவரும் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து சாமுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோசமான செயலில் ஈடுபட்டு வந்ததால் நடவடிக்கை
    • கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஊராட்சி ஒன் றிய வட்டார கல்வி அலுவல ராக பாபு என்பவர் பணி யாற்றி வந்தார். இவர் சாதி பாகுபாடு காட்டுதல், பெண் ஆசிரியர்களை கீழ்தரமாக பேசுவது உள்ளிட்ட மோச மான செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் மீது சட் டரீதியான நடவடிக்கை எடுக்ககோரி தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணிமே கலை, மாநில பொருளாளர் மத்தேயு, மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட செயலா ளர் அமர்நாத், மாவட்ட பொருளாளர் தனலட்சுமி ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் பாபுவை திருவண்ணாமலை மாவட் டம் துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

    • நெய்தீபம் ஏற்றி அம்மனை வழி பட்டனர்
    • குழந்தையின்மை, திருமண தடை, தொழில்தடை ஆகியவை விலகும் என்பது நம்பிக்கை

    கலவை:

    ஆற்காடு அடுத்து முப்பந்தொட்டியில் பகுதியில் உள்ள வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் திரளான பக்தர்கள் வாராஹி அம்மனை வழிபட்டுசெல்வது வழக்கம். இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அடுத்த 5-வது நாளில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது.

    இந்த மாதத்திற்கான தேய்பிறை பஞ்சமி வழிபாடு நேற்று காலை நடந்தது. அதில் பக்தர்கள் தேங்காய் மற்றும் பூசணிக்காயை 2 உடைத்து அதில் நெய்தீபம் ஏற்றி அம்மனை வழி பட்டனர்.

    நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் குடும்பத்தில் உள்ள பிரச்சினை குழந்தையின்மை, திருமண தடை, தொழில்தடை ஆகியவை விலகும் என்பது நீண்ட கால நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    இந்த பஞ்சமி வழிபாட்டில் கலந்து கொள்ள மாதந்தோறும் ராணிப்பேட்டை, வேலூர், பெங்களூர் திருப்பத்தூர், சென்னை மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வாராஹி அம்மனை வழிபட்டு அருள் பெற்று செல்கின்றனர்.

    • பாணாவரம் சுப்பிரமணிய சாமி கோவிலில் நடந்தது
    • பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் உள்ள சுப்ரமணியசாமி, வள்ளி,தேவசேனா கோவிலில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர், உற்சவர் சுப்ரமணியசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம், செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து மாலை சுப்ரமணிய சாமி, வள்ளி, தேவசேனா சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு மங்கள வாத்தியங்களுடன் கிரிவல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, சோளிங்கர் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • புதிய கட்டுப்பாடுகள்
    • பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சிலை நிறுவிட சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விண்ணப்பத்துடன் சிலை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் தனியார் இடமாக இருப்பின் நில உரிமையாளர் இசைவுக்கடிதமும், பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறையின் ஆட்சேபணையில்லாச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொட்டகைக்கு உட்பகுதியில் வைக்கக் கூடாது. விநாயகர் சதுர்த்தி அன்று நிறுவ உத்தேசி க்கப்பட்டுள்ள சிலைகள் அதன் அடிப்பாகம் உட்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் மருத்துவமனைகள்,கல்வி நிறுவனங்கள் அருகாமை யில் சிலைகள் அமைக்க க்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைப்பது தவிர்த்து பெட்டி வடிவிலான ஒலிபெரு க்கிகளை பயன்படுத்த வேண்டும்.

    இவ்விழா தொடர்பாக கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின் அவற்றின் ஒலி அளவும் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே இருத்தல் வேண்டும். விழாக்குழுவினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் மின்சாரத்தினை பயன்படுத்துவதை தவிர்க்க உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். விழாக்குழுவினர் சார்பாக இரு தன்னார்வ லர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மற்ற மதத்தினர்களின் வழிபாட்டினை, நம்பிக்கை களை இழிவுபடுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்ப கூடாது.

    5 நாளில் கரைப்பு

    சிலை நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் சிலைகள் கரைப்பதற்கு விழாக்குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலங்கள் காவல் துறை யினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று கரைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்தின் விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அரசு மானியத்துடன் கூடிய பவர் டில்லர் எந்திரங்களை வழங்கினார். மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ 2 கோடியே 62 லட்சம் மதிப்பில், ரூ.1 கோடி மதிப்பிலான மானியத்தில் மொத்தம் 117 பவர் டில்லர், 4 பவர் வீடர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    பின்னர் அமைச்சர் ஆர்.காந்தி ,மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது சோளிங்கர் அருகே சோமசமுத்திரம் பகுதியை சேர்ந்த மணி தான் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறேன்.

    சிகிச்சைக்காக சென்னை சென்று வருவதால் போக்குவரத்து செலவினைமேற்கொள்ள போதிய வசதி இல்லை, மேலும் முதியோர் உதவி தொகை பெற தகுதி இல்லை எனமனு கொடுத்தார். இதை தொடர்ந்து அவருக்கு மாதந்தோறும் தனது சொந்த செலவில் ரூ.1000 வழங்குவதாகவும், தனது அலுவலகத்தில் வந்து பெற்று கொள்ளுமாறு அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

    இதில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வழிபாடு
    • நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடாதிபதி டாக்டர்.முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நாளை புதன்கிழமை முதல் 3 நாட்கள் முப்பெரும் யாகங்கள் நடைபெறுகிறது.

    அதன்படி நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாலை 4 மணிக்கு நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு ஹோமமும், அபிஷேகமும், வெண்ணெய் சாற்றி சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடைபெறுகிறது.

    7-ந் தேதி வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அஷ்ட கால மகா பைரவர் ஹோமமும், சொர்ண கால பைரவர் பூஜையும் விசேஷ அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகிறது.

    வருகிற 8-ந் தேதி நவமி திதியில் காலை முதல் மாலை வரை சர்வ மங்களங்களை தரும் மங்கள சண்டி யாகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    • பெங்களூரில் நடந்தது
    • பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

    கலவை:

    பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குங்பூ மற்றும் கராத்தே போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு முதல் மற்றும் 2-ம் இடம் பெற்றனர்.

    மாஸ்டர் கோட்டிஸ்வரன் தலைமையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ரோட்டரி தலைவர் பரத்குமார் ஏ.பி.ஜே அறக்கட்டளை தலைவர் கோபி மற்றும் கிரான்ட் மாஸ்டர் லீ ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    ×