பொதுமக்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

போலீசாருக்கு டி.எஸ்.பி. உத்தரவு இன்ஸ்பெக்டர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
பொதுமக்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்ட காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அரக்கோணம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கான ஆய்வு கூட்டம் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. பிரபு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் குற்ற வழக்குகள் குறைப்பது, கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து டி.எஸ்.பி., காவல் நிலைய அதிகாரிகளை கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்த வேண்டும் மேலும் போலீஸ் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதில், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், லட்சுமிபதி, பாரதி, பழனிவேலன், பாரதி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com