என் மலர்
உள்ளூர் செய்திகள்

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் முப்பெரும் யாகம்
- கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வழிபாடு
- நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடாதிபதி டாக்டர்.முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நாளை புதன்கிழமை முதல் 3 நாட்கள் முப்பெரும் யாகங்கள் நடைபெறுகிறது.
அதன்படி நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாலை 4 மணிக்கு நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு ஹோமமும், அபிஷேகமும், வெண்ணெய் சாற்றி சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடைபெறுகிறது.
7-ந் தேதி வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அஷ்ட கால மகா பைரவர் ஹோமமும், சொர்ண கால பைரவர் பூஜையும் விசேஷ அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகிறது.
வருகிற 8-ந் தேதி நவமி திதியில் காலை முதல் மாலை வரை சர்வ மங்களங்களை தரும் மங்கள சண்டி யாகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
Next Story






