ஆடி மாத கிருத்திகை வழிபாடு

பாணாவரம் சுப்பிரமணிய சாமி கோவிலில் நடந்தது பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
ஆடி மாத கிருத்திகை வழிபாடு
Published on

காவேரிப்பாக்கம்:

பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் உள்ள சுப்ரமணியசாமி, வள்ளி,தேவசேனா கோவிலில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர், உற்சவர் சுப்ரமணியசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம், செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதை தொடர்ந்து மாலை சுப்ரமணிய சாமி, வள்ளி, தேவசேனா சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு மங்கள வாத்தியங்களுடன் கிரிவல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, சோளிங்கர் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com