search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு பவர் டில்லர்
    X

    விவசாயிகளுக்கு பவர் டில்லர்

    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்தின் விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அரசு மானியத்துடன் கூடிய பவர் டில்லர் எந்திரங்களை வழங்கினார். மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ 2 கோடியே 62 லட்சம் மதிப்பில், ரூ.1 கோடி மதிப்பிலான மானியத்தில் மொத்தம் 117 பவர் டில்லர், 4 பவர் வீடர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    பின்னர் அமைச்சர் ஆர்.காந்தி ,மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது சோளிங்கர் அருகே சோமசமுத்திரம் பகுதியை சேர்ந்த மணி தான் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறேன்.

    சிகிச்சைக்காக சென்னை சென்று வருவதால் போக்குவரத்து செலவினைமேற்கொள்ள போதிய வசதி இல்லை, மேலும் முதியோர் உதவி தொகை பெற தகுதி இல்லை எனமனு கொடுத்தார். இதை தொடர்ந்து அவருக்கு மாதந்தோறும் தனது சொந்த செலவில் ரூ.1000 வழங்குவதாகவும், தனது அலுவலகத்தில் வந்து பெற்று கொள்ளுமாறு அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

    இதில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×