என் மலர்
ராணிப்பேட்டை
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே குருவராஜப்பேட்டை மங்கலங்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 2022-23-ம் கல்வியாண்டில் அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கி பேசினார்.
ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஒய்வு பெற்ற டிஐஜி பாண்டியன், ஒய்வு பெற்ற கல்லூரி முதல்வர் பால் வண்ணன், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிரேமலதா, வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்றவ்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.
மேலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளையும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
- பால் ஊற்றுவதற்காக சாலை ஓரம் சென்று கொண்டிருந்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செங்கம்:
செங்கம் அடுத்த ரோடுகரியமங்கலம் சேர்ந்தவர்கள் பரிதா (வயது 37), சின்னபாப்பா(55), ஜெயமணி (38). இவர்கள் அதே பகுதியில் உள்ள பகுதியில் இன்று காலை பால் ஊற்றுவதற்காக சாலை ஓரம் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக பால் ஊற்ற வந்த 3 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக பரிதா மற்றும் ஜெயமணி ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்தற்காக இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது வழங்கப்பட்டது
- காசோலையினை கலெக்டரிடம் வழங்கினார்
கலவை:
கலவை சுற்றுப்பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் மருத்துவ சிகிச்சை பெற அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இங்கு வரும் மக்களின் நலனுக்காக ஓய்வு பெற்ற அரசு மருத்துவரும் மற்றும் கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்தற்காக இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது பெற்ற மனிதநேய மருத்துவருமான செங்கோட்டையன் கலவை அரசு மருத்துவமனைக்கு ரூ.74 ஆயிரம் மதிப்புள்ள ரத்த பரிசோதனை கருவி (செமி ஆட்டோ அனலைசர்) வாங்குவதற்கான காசோலையினை கலெக்டர் வளர்மதியிடம் வழங்கினார்.
அப்போது, மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் விஜயா முரளி , சமூக ஆர்வலர் புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா நகரில் மிகப் பழமையான சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.
இங்கு மூலவர் விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பர்வதவர்தினி சமேத ராமநாதார், மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளது.
இதற்கிடையே இந்த கோவிலுக்கு சிறிய அளவிலான தேர்செய்திட தீர்மானிக்கப்பட்டது இதற்காக பக்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் அடங்கிய திருப்பணிகுழு அமைக்கப்பட்டது.
நன்கொடையாளர்கள் உதவியுடன் தேர்செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். இந்தப் பணியை மதுரை மணிகண்ட ராஜா தலைமை யிலான ஸ்தபதிகள் ஈடுபட்டனர்.
ரூ.25 லட்சம் மதிப்பில் 18 அடி உயரத்தில் 3 டன் எடையில் வெக்கை தேக்கு மரத்தினால் தேர் செய்யப்பட்டு இதற்கான வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர். காந்தி கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டனர். தொடர்ந்து 4 மாடவீதி களிலும்தேர் பவனி வந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் லட்சுமணன், வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோபி, திருப்பணி குழு தலைவர் வேலு உள்பட கோவில் நிர்வா கிகள், நகரமன்ற உறுப்பி னர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 250-கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
- ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது
வாலாஜா:
வாலாஜாவில் வட்டார சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் நேற்று நடந்த மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி மகாசக்தி தலைமை தாங்கினார்.
வட்டார சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் வக்கில்ஸ்ரீதரன் மற்றும் பல்வேறு வக்கீல்கள் இந்த வழக்குகளை விசாரணை நடத்தினர் .
அப்போது நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், குடும்ப நல, செக் மோசடி வங்கி கடன் நிலுவை உள்பட பல்வேறு அபராத மற்றும் தொழிலாளா் நல வழக்குகள் மற்றும் கிரிமினல் பண மோசடி வாகன விபத்து, நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் 250-கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.
நீதிமன்றங்க ளில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவா்களது வக்கீல்கள் மூலம் மக்கள் நீதிமன்றத்துக்கு வழக்குகளை அனுப்பி வைத்தனர். அதில் சில வழக்குகள் சமரசம் பேசி தீா்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வாலாஜா ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உச்சநீதி மன்ற, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி சமரசத் தீர்வு மையத்தையும் நீதிபதி மகா சக்தி திறந்து வைத்தார். இதில் வக்கீல் சங்க தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர் .
தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 245 குற்ற வழக்குகள் முடிவு செய்யப்பட்டு அதில் ரூ.1லட்சத்து 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
மேலும் 21 வழக்குகளில் கடன் தொகை ரூ.3 லட்சத்து 22ஆயிரத்து 200 வசூல் செய்து முடிவு காணப்பட்டது.
இதில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள காசோலை வழக்குகள் இன்று சமரசம் செய்து வழக்குகள் முடிக்கப்பட்டது.
- ராணிப்பேட்டையில் நாளை நடக்கிறது
- அமைச்சர் ஆர். காந்தி அழைப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் , கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை பாரதிநகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நாளை 10-ந்்தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே. சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் தி.மு.க.முப்பெரும் விழா, பவள விழா குறித்தும்,வாக்காளர் பட்டியல் , வாக்குச்சாவடி சரிபார்த்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. எனவே கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ,தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தவறாது பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பாணாவரம் போலீஸ் நிலையத்தில் நடந்தது
- சிலை 9 அடி உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது
காவேரிப்பாக்கம்:
பாணாவரம் போலீஸ் நிலையத்தில் வரும் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், விநாயகா் சதுா்த்தி விழா குறித்த அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சிலை 9 அடி உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது.
சென்ற ஆண்டு சிலை வைத்தவா்கள் மற்றும் ஊா்வலம் நடத்தியவா்களுக்கு மட்டும், இந்த ஆண்டு சிலை வைக்கவும், ஊா்வலம் நடத்தவும் அனுமதி வழங்கப்படும்.
சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குள் விஜர்சனம் செய்ய வேண்டும்.
தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- முதல் -அமைச்சரால் காணொளி மூலம் திறக்கப்பட்டது
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதியதாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
இந்த கிடங்கினை நேற்று தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சேமிப்பு கிடங்கை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்த கிடங்கில் அரசு நிர்ணயித்துள்ள கட்ட ணத்தின் அடிப்படையில் தனியார் துறை நிறுவன ங்களும் தங்கள் உற்பத்தி பொருட்களை வாடகையின் அடிப்படையில் சேமித்துக் கொள்வதற்கான வழிவகைகள் செய்ய ப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி,சேமிப்பு கிடங்கு நிறுவன மண்டல மேலாளர் வசந்த். மாவட்ட கவுன்சிலர் செல்வம்,ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரி, நகரமன்ற உறுப்பினர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதிப்பு கூட்டலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டம்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித் துள்ளவாறு, மாவட்டந்தோ றும் மகளிர் சுய உதவிக் குழுக் கள் உற்பத்தி செய்திடும் பொருட்களை மதிப்பு கூட் டுதல், சந்தைப்படுத்துதல் மற் றும் அதிக சந்தை செய்து தருதல் போன்றவை மேற் கொள்ள ஒவ்வொரு வட்டா ரத்திலும் ஒரு பொருளை கலெக்டர் தேர்வு செய்து 2023-2024-ம் ஆண்டில்மேம்ப டுத்திடவும், பொதுவான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் தேவைப்படும் மதிப்பு கூட்டலுக்கான வாய்ப்பு களை ஏற்படுத்துவதற்கான இடவசதிகள், உற்பத்தி செய் திடும் ஒரு பொருளை தேர்வு செய்திடல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத் தில் அரக்கோணம் லுங்கி, ஆற்காடு இயற்கை தேன், காவேரிப்பாக்கம் பாக்கு மட்டை, நெமிலி புடவை, சோளிங்கர் ஊறுகாய், மசாலா தூள், திமிரி மஞ்சள், வாலாஜா சணல் பை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளத்தில் இறந்து கிடந்தார்
- போலீசார் விசாரணை
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வர வில்லை.
இதனால் மனைவி மல்லிகா மற்றும் மகன், மகள்கள் அவரை தேடினர். இந்தநிலையில் மேல்நெல்லி தட்டச்சேரி செல்லும் சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கலவை சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அவர் தடுமாறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
- வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற அணிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பரிசு வழங்கினார்.
இதில் தி.மு.க மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு எம்.எல்.ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட பொருளாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மனநலம் பாதிக்கப்பட்டவர்
- சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த குடிமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மா (வயது85). இவர் அதே ஊரில் தனது மகள் அமுதா, மகன் அசோக் ஆகியோருடன் வசித்து வந்தார்.
அமுதாவின் மகள் தங்கமணி (36) திருமணமாகாதவர். மனநலம் பாதிக்கப்பட்ட தங்கமணி பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அனைவரும் வீட்டில் இருந்த நேரத்திலேயே தங்கமணி திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தனது பாட்டி சின்னம்மாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட தங்கமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






