பாட்டியை கத்தியால் வெட்டிய பேத்தி கைது

மனநலம் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
பாட்டியை கத்தியால் வெட்டிய பேத்தி கைது
Published on

ராணிப்பேட்டை:

வாலாஜா அடுத்த குடிமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மா (வயது85). இவர் அதே ஊரில் தனது மகள் அமுதா, மகன் அசோக் ஆகியோருடன் வசித்து வந்தார்.

அமுதாவின் மகள் தங்கமணி (36) திருமணமாகாதவர். மனநலம் பாதிக்கப்பட்ட தங்கமணி பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் அனைவரும் வீட்டில் இருந்த நேரத்திலேயே தங்கமணி திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தனது பாட்டி சின்னம்மாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட தங்கமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com