என் மலர்
நீங்கள் தேடியது "சமரசத் தீர்வு மையம்"
- 250-கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
- ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது
வாலாஜா:
வாலாஜாவில் வட்டார சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் நேற்று நடந்த மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி மகாசக்தி தலைமை தாங்கினார்.
வட்டார சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் வக்கில்ஸ்ரீதரன் மற்றும் பல்வேறு வக்கீல்கள் இந்த வழக்குகளை விசாரணை நடத்தினர் .
அப்போது நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், குடும்ப நல, செக் மோசடி வங்கி கடன் நிலுவை உள்பட பல்வேறு அபராத மற்றும் தொழிலாளா் நல வழக்குகள் மற்றும் கிரிமினல் பண மோசடி வாகன விபத்து, நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் 250-கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.
நீதிமன்றங்க ளில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவா்களது வக்கீல்கள் மூலம் மக்கள் நீதிமன்றத்துக்கு வழக்குகளை அனுப்பி வைத்தனர். அதில் சில வழக்குகள் சமரசம் பேசி தீா்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வாலாஜா ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உச்சநீதி மன்ற, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி சமரசத் தீர்வு மையத்தையும் நீதிபதி மகா சக்தி திறந்து வைத்தார். இதில் வக்கீல் சங்க தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர் .
தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 245 குற்ற வழக்குகள் முடிவு செய்யப்பட்டு அதில் ரூ.1லட்சத்து 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
மேலும் 21 வழக்குகளில் கடன் தொகை ரூ.3 லட்சத்து 22ஆயிரத்து 200 வசூல் செய்து முடிவு காணப்பட்டது.
இதில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள காசோலை வழக்குகள் இன்று சமரசம் செய்து வழக்குகள் முடிக்கப்பட்டது.






