என் மலர்
உள்ளூர் செய்திகள்

வட்டார கல்வி அலுவலர் பணியிடமாற்றம்
- மோசமான செயலில் ஈடுபட்டு வந்ததால் நடவடிக்கை
- கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஊராட்சி ஒன் றிய வட்டார கல்வி அலுவல ராக பாபு என்பவர் பணி யாற்றி வந்தார். இவர் சாதி பாகுபாடு காட்டுதல், பெண் ஆசிரியர்களை கீழ்தரமாக பேசுவது உள்ளிட்ட மோச மான செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் மீது சட் டரீதியான நடவடிக்கை எடுக்ககோரி தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணிமே கலை, மாநில பொருளாளர் மத்தேயு, மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட செயலா ளர் அமர்நாத், மாவட்ட பொருளாளர் தனலட்சுமி ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் பாபுவை திருவண்ணாமலை மாவட் டம் துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.
Next Story






