என் மலர்
நீங்கள் தேடியது "சிமெண்ட்டு சாலை"
- பணிகளை நகராட்சி நிர்வாகம் முடித்துவிட்டு சென்றனர்
- தர்ணாவில் ஈடுபட்டனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட 5-வது வார்டில் நகராட்சி நிர்வாகம் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கியது.
இதில் அதே பகுதியில் வசிக்கும் கஸ்தூரி- ரங்கன் தம்பதியினர் தனது குடும்பத்தினருடன் நகராட்சி பணிகளை நிறுத்தி அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மண் சாலையில் அமர்ந்து நகராட்சி பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களை தடுத்து நிறுத்தினார்.
தகவல் அறிந்து உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, அமரேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். ஆணையருக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் முன்னிலையில் நடத்தினர்.
பின்னர் இறுதியாக நீதிமன்ற தீர்ப்பின் பிறகு சாலைகளை அப்புறப்படுத்தி தருவதாக கூறினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 5 மணி நேரத்திற்கு பிறகு சாலை அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் முடித்துச்விட்டு சென்றனர் .






