என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு
- நெய்தீபம் ஏற்றி அம்மனை வழி பட்டனர்
- குழந்தையின்மை, திருமண தடை, தொழில்தடை ஆகியவை விலகும் என்பது நம்பிக்கை
கலவை:
ஆற்காடு அடுத்து முப்பந்தொட்டியில் பகுதியில் உள்ள வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் திரளான பக்தர்கள் வாராஹி அம்மனை வழிபட்டுசெல்வது வழக்கம். இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அடுத்த 5-வது நாளில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
இந்த மாதத்திற்கான தேய்பிறை பஞ்சமி வழிபாடு நேற்று காலை நடந்தது. அதில் பக்தர்கள் தேங்காய் மற்றும் பூசணிக்காயை 2 உடைத்து அதில் நெய்தீபம் ஏற்றி அம்மனை வழி பட்டனர்.
நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் குடும்பத்தில் உள்ள பிரச்சினை குழந்தையின்மை, திருமண தடை, தொழில்தடை ஆகியவை விலகும் என்பது நீண்ட கால நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த பஞ்சமி வழிபாட்டில் கலந்து கொள்ள மாதந்தோறும் ராணிப்பேட்டை, வேலூர், பெங்களூர் திருப்பத்தூர், சென்னை மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வாராஹி அம்மனை வழிபட்டு அருள் பெற்று செல்கின்றனர்.






