என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 3 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா;

    வாலாஜாபேட்டை பஜார் எம்.பி.டி சாலையில் தாலுகா அலுவலகம் எதிரே பழஜூஸ் கடை நடத்தி வருபவர் பாரூக் (வயது 35) இவரது மனைவி ஷாயின் பாணு (30) இவர்களுக்கு ஹத்மா பர்வீன் (7) என்ற மகளும், பரான் (2) என்ற மகனும் என 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று பாரூக் தனது மகள் படிக்கும் பள்ளியில் பாட புத்தகங்கள் வாங்க மொபட்டில் மனைவி ஷாயின்பாணு, ஹத்மா பர்வீன், பரான் ஆகியோருடன் மொபட்டில் தென்கடப்பந்தாங்கல் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அரசு மகளிர் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது இவர்களுக்கு பின்னால் வேலூரில் இருந்து கல்பாக்கம் சென்று கொண்டிருந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இதில் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. படுகாயம் அடைந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 15 பவுன் நகையை பறித்துக் கொண்டதாக போலீசில் புகார்.
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 31). இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவருக்கும் ஜெகநாதன்தெருவில் உள்ள சரவணன் மகள் அனுபிரியா ( 21 ) என்பவரு டன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 3 வருடங்களாக பழகி வந்தனர். ஆசை மேலும் தனக்குதிருமணம்நடந்ததை மறைத்துபழகிவந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி அனுபிரியாவை அழைத் துக்கொண்டு கணேஷ் கிருஷ்ணகிரிக்கு சென்று அவரை திருமணம் செய்து, அங்கேயே வசித்து வந்தனர்.

    அனு பிரியாவை காணவில்லை என அவரது தாயார் கீதா ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து அனு பிரியாவை தேடி வந்தனர். இந்த நிலையில் அனுப்பிரியா தனது தாயாருக்கு போன் மூலம் நலம் விசாரித்துள்ளார். அப்போது கணேசன் அனுப்பிரியா திருமணம் செய்துள்ளதை அறிந்த அவரது தாயார் நீ திருமணம் செய்துள்ள கணேஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் அவருக்கு ஒரு மகள் உள்ளார் என்று கூறினார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுப்பிரியா எதுவும் தெரியாதது போல் நடித்து கணேசை ஆற்காட்டிற்கு அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் பிடித்து கொடுத்துள்ளார். மேலும் கணேஷ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார் என்றும் 15 பவுன் நகையை பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் கணேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிகள் வேதனை
    • கொள்முதல் செய்யப்படும் தேதியை நீட்டிக்க வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த செட்டிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனால் இதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த நெல்லை இடைத்தரகர் இல்லாமல் நல்ல லாபகரமான விலைக்கு விற்று பயனடைந்து வருகின்றனர்.

    இதில் கொள்முதல் செய்யப்படும் தேதி நேற்று கடைசி என நெல் கொள்முதல் செய்யும் மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் மழை, வெயிலால் தேங்கிக் கிடக்கும்நெல் மூட்டையின்நிலை என்ன வென்று தெரியவில்லை.இதனால் விவாசிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் கொள்முதல் செய்யப்படும் தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி.
    • ேபாலீசார் விசாரணை

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அத்தியா னம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி பானுமதி (வயது 70). இவர் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் உமா அத்தியாயம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். பானுமதி சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 12 மணி அளவில் உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் வலிதாங்க முடி யாமல் வெளியே ஓடி உள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக் கம்பாறை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமா கலவை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மலேரியா அறிகுறிகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர்.
    • ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் சேரி , சிறுவளையம், துறைபெரும்பாக்கம், கீழ்வீராணம் உள்ளிட்ட பகு திகளில் பொதுமக்கள் மத்தியில் மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    சிறுகரும்பூர் ஊராட்சியில் நடந்த மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ் பங்கேற்று பேசினார். அப்போது மலேரியா குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துரைத்தார்.

    மேலும் பொதுமக்கள் எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மலேரியா நோய்க்கு சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவசமாக கிடைக்கும், என்றார்.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் குமார், தமிழ்ச்செல்வன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் மோகனசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைசார்பாக முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத் துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    பின்னர் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் , மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் வசந்தி ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏரி, கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவேரிப்பாக்கம் கடப்பாக்கம் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் அவதிகுள்ளாயினர்.

    நள்ளிரவு பலத்த மலை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிகள் கால்வாய்கள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
    • கதவை பூட்டிக்கொண்டு தூக்கில் தொங்கினார்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மாறன் கண்டிகையை சேர்ந்தவர் திருமூர்த்தி(வயது 27) இவரது மனைவி சங்கீதா திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    திருமாறன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு சங்கீதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருமூர்த்தி வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அரக்கோணத்தில் தொடரும் தற்கொலையால் இச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்தார்.
    • ேபாலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த காவனூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 59). இவர் வீட்டின் அருகே டிபன் கடை நடத்தி வந்தார்.

    இவருக்கு உடல் நலம்பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார் கருணாமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    • சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் தரிசனம்.

    நெமிலி:

    ராணிப்பேட்டைமாவட்டம் நெமிலியில் உள்ள விசா லாட்சி அம்மன் சமேத புன்ன கேஷ்வரர் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட விசாலாட்சி அம் மன் சமேத புன்னகேஷ்வரர் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம் மனை வழிபட்டனர்.

    • 118 மாணவர்கள் மற்றும் 43 மாணவிகள் பங்கேற்றனர்.
    • 25 மாணவிகளுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ராணிப்பேட்டை:

    44-வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி சென்னை மகாபலிபுரத்தில் வருகிற 28.7.22-ந் தேதி முதல் 10.8.22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 11, 12-ந் தேதிகளில் (சனி, ஞாயிற்றுக் கிழமை) 2 நாட்கள் ஆற்காடு ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது.

    இதில் வெற்றி பெறும் ஆண் மற்றும் பெண் போட்டியாளர் 44-வது சர்வதேச சதுரங்க போட்டியை நேரில் காணும் வாய்ப்பு பெறுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 118 மாணவர்கள் மற்றும் 43 மாணவிகள் பங்கேற்றனர்.

    இப்போட்டியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, ஆற்காடு நகர மன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

    இதில் முதல் 25 இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் 25 மாணவிகளுக்கு ஒலிம்பியாட் சின்னம் பொறித்த பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மாணவர் பிரிவில் ரிஷிகேஷவா, மாணவிகள் பிரிவில் ஸ்ரீ சாத்விகா ஆகியோர் முதலிடம் பிடித்து, சர்வதேச சதுரங்க போட்டியை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ராணிப்பேட்டை மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் விஜயகுமார், செயலாளர் அப்துல் கரீம், பொருளாளர் சோழவேந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஆங்கில வழிக் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது.
    • பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி வலியுறுத்தினர்.

    ஆங்கில வழிக் கல்வியும் இலவசமாக தமிழக அரசு வழங்குவதாக மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் கொடுத்து மாணவர்கள் படிப்பில் தங்குதடையின்றி படிக்க வழிவகை செய்வதாகும் எனவே தமிழக அரசு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி வீதி வீதியாக சென்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் நெமிலி சேர்மன் வடிவேலு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×