என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • நண்பர்களை பார்த்து கைகொடுத்து அன்பை வெளிப்படுத்தினர்.
    • நிலையான இடத்தில் இருப்பதற்கு ஆசிரியர்களே காரணம் என நெகிழ்ச்சி

    அரக்கோணம்:

    அரக்கோணம் சிஎஸ்ஐ,தூய அந்திரேயர் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 89-92 ஆம் ஆண்டு படித்த பள்ளி மாணவ மாணவிகள் முனீர் அஹமத், செழியன், ராஜேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் 32 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு நடைபெற்றது.

    இந்த நெகிழ்ச்சியான சந்திப்பில் பிரிந்து சென்ற மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்கள் பள்ளி அனுபவங்களையும் ஆசிரியர்களின் பெருமைகளையும் பாராட்டி பள்ளி பருவ கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் மூலம் 32 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தனது நண்பர்களை பார்த்து கைகொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினர்.

    பழைய ஆசிரிய ஆசிரியர்களை நினைவு கூர்ந்து அவர்களின் பெருமைகளை பாராட்டி தன் வாழ்நாளில் தாங்கள் ஒரு நிலையான இடத்தில் இருப்பதற்கு ஆசிரியர்களே காரணம் என நெகிழ்ந்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.

    • பாணாவரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பை சேர்ந்தவர் ஆரோக்கியம்.
    • மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பை சேர்ந்தவர் ஆரோக்கியம் என்பவரது மகன் கிளின்டன் (வயது 21).3 மாதங்களுக்கு முன்பு அதே குடியிருப்பில் வசிக்கும் சுஜிதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தொடர்ந்து தம்பதியினர் சென்னையில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கிளின்டன் அவரது மனைவியுடன் பாணாவரம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்தார்.நேற்று காலை கிளின்டன் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அருகே பதுங்கியிருந்த மர்ம நபர்கள் கிளின்டனை கத்தியால் வெட்டி சாய்த்தனர்.

    இதில் அவரது கன்னம், கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்தது.மேலும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிளின்டனை மீட்டு பாணாவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிளின்டனை வெட்டியவர்கள் யார்? எதற்காக வெட்டினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரக்கோணம் அருகே உள்ள ஷா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 58).
    • சொந்தமான விவசாய நிலம் அரக்கோணம் அருகே உள்ள காவனூர் கிராமத்தை ஒட்டி உள்ளது.

    அரக்கோணம் அருகே உள்ள ஷா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 58). சென்னையில் ரெயில்வேயில் பணியாற்றி வந்த இவர் விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது இளைய மகன் ரோஷன் (வயது 28). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அரக்கோணம் அருகே உள்ள காவனூர் கிராமத்தை ஒட்டி உள்ளது. நேற்று முன்தினம் ரோஷன் அவருடன் பணியாற்றிய நண்பர் யுவராஜ் (38) என்பவருடன் காவனூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு வந்தனர்.

    அதன்பின் இருவரும் சென்னை திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்களின் குடும்பத்தினர் இதுகுறித்து கிராமத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை காவனூர் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் ரோஷன், யுவராஜ் இருவரும் பிணமாக மிதந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் குளிக்கும் போது கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 22 வாரங்களாக பயிற்சி நடந்தது.
    • 7 கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கு சான்றிதழ்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐ.என்.எஸ் . ராஜாளி கடற்படை விமான தளத்தில் உள்ள ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியில் கடந்த 22 வாரங்களாக பயிற்சிமேற்கொண்ட 98 - வது கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா அங்குள்ள வளாகத்தில் நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கடற்படையின் கிழக்கு பிராந் திய துணை தளபதி சஞ்சய் வத்சயன் கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரி யாதையை ஏற்றுக் கொண்டார்.

    பின்னர் பயிற்சி முடித்த 7 கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கு சான்றிதழ்களையும், பயிற்சியில் அனைத்து பிரிவுகளிலும் முத லிடம் பிடித்த பயிற்சி விமா னிக்கான பிளாக் ஆபீசர் கமாண்டிங் இன் சீப், கிழக்கு பிராந்திய கடற்படை கமாண்ட் ரோலிங் சுழற் கோப்பை வம்சி காஷ்முக்கு வழங்கப்பட்டது.

    சப் லெப்டினன்ட் குண்டே நினைவுப் புத்தகப் பரிசு, புனித் வம்சி கைஷிங்கிற்கும் ஒட்டுமொத்த தகுதி வரிசையில் முதலிடம் பிடித்ததற்காககேரள ஆளுநர் ரோலிங் சுழற்கோப்பை எஸ் . வம்சிதிரிஷ்னாவுக்கும் வழங்கப்பட்டது.

    விழாவில் கடற்படையின் கிழக்கு பிராந்திய துணை தள பதி சஞ்சய் வத்சயன் பேசிய தாவது:-

    நமது கடற்படை பல ஆண்டுகளாக பொறுப்பான மற்றும் நம்பகமான படையாக வளர்ந்துள்ளது.

    இந்தோ பசி பிக் பிராந்தியத்தை நோக்கி ஒரு தனித்துவமான மாற்றத் தைக் கண்டுள்ளது. கடற் கொள்ளை , கடத்தல் மற்றும் மனிதர்கள் கடத்தல் போன்ற நாடு கடந்த குற்றங்களின் அதிகரிப்பு மற்றும் நடந்து கொண்டிருக்கும் பொருளா தார அதிகார போராட்டம், ஸ்திரத்தன்மை மற்றும் ஊடு ருவல் போன்றவை சுதந்தி ரத்தை அச்சுறுத்தும் வகை யில் , கடல்சார் களம் அதிக ரித்து வருகிறது.

    இந்தியக் கடற்படை , குறிப் பாக கடற்படை விமானப் படை எந்த சவாலுக்கும் பதிலளிக்கும் வகையில் தயா ராக உள்ளது. இந்த ஆண்டு கடற்படையானது முழு அளவிலான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியது.

    அமெரிக்கா, ரஷ்யா, இங்கி லாந்து, ஜப்பான், ஆஸ்திரே லியா, பிரான்ஸ், இலங்கை, இந்தோனேசியா, ஓமன் மற்றும் ஐக்கிய அமிரகம் உள் ளிட்ட நாடுகளுடன் பல இருதரப்பு பயிற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.

    பயிற்சி பெற்ற பைலட்டுகளுக்கு , கடலுக்குமேல் ஹெலி காப்டர் இயக்குதல், இரவு நேரத்தில் இயக்குதல் போன்ற கடினமான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பணியில் சிறந்து விளங்குவர்.

    நாட்டின் பாதுகாப்பு பணியில் இவர்கள் பணி முக்கியத்துவம் மிகுந்ததாக உள்ளது. பயிற்சி நிறைவு செய்த விமானிகளை நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர்பேசினார்.

    • வைகாசி மாதத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜை
    • அருகம்புல் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடந்தது

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருமான் பிள்ளையார் கோவிலில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    கருமான் பிள்ளையாருக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மலர்மாலை அருகம்புல் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    • பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்
    • எதிர்ப்பை மீறி மணல் குவாரி அனுமதித்தால் தொடர் போராட்டம்





    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் அங்கு மணல் குவாரி அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தக்கோளத்தில் வியாபாரிகள் இன்று அப்பகுதியில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    தக்கோலத்தில் மணல் குவாரி அமைத்தால்அதை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பாதிப்படைவர் அதுமட்டுமல்ல தக்கோலம் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இங்கிருந்து தான் குடிநீர் அனுப்பப்படுகின்றது.

    குறிப்பாக அரக்கோணம் நகராட்சிக்கு வாழ்வதற்கான குடிநீரை இப் பகுதியிலிருந்துதான் அனுப்புவதாகவும் இதனால் விவசாயிகள் மட்டுமல்ல பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

    இதனால் இங்கு மணல் குவாரி அமைக்க கூடாது என்றனர்.

    பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி மணல் குவாரி அனுமதிக்கப்பட்டால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த செங்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமபுரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் ரூ.14 லட்சத்தில் 2 புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார்.ஒனறிய குழு தலைவர் கலைக்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் செங்கல்நத்தம் முனியம்மாள் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் ஏ.எம். முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரூ.14 லட்சத்தில் 2 புதிய வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி, திறந்து வைத்தார். குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவர்கள் பயண்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    அப்போது கிராம நிர்வாக அலுவலர் சானு, வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார், சோளிங்கர் காங்கிரஸ் நகர தலைவர் கோபால் ஒன்றிய செயலாளர் கார்த்திக் ஊராட்சி மன்ற தலைவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ராஜஸ்தான் மாநில ராணுவத்தில் பணிபுரிகிறார்.
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர் :

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வைலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகன் முரளி (வயது 32). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிகிறார்.

    கடந்த 14-ந் தேதி விடுமுறையில் மயிலம்பாடி க்கு வந்தார். இவரது மாமியார் வீடு சோளிங்கரில் உள்ளது. இவர் மாமியார் வீட்டிற்கு வருவதற்காக பைக்கில் கூடலூர் நெடுஞ்சாலையில் வரும்போது அங்கிருந்த வேகத்தடை இருப்பதை கவனிக்காமல் அதில் ஏறி இறங்கி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று இரவு சேர்த்தனர், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து கொண்ட பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகிறார்
    • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை

    ராணிப்பேட்டை:

    தி.மு.க. ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் அமைச்சர் காந்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மு.க.ஸ்டாலின் வருகை

    ராணிப்பேட்டை பூட்டுத்தாக்கில் புதியதாக கட்டப்பட்டுள்ள சி.எம்.சி. அம்மருத்துவமனையை திறந்திடவும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தை திறந்திடவும் ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கவும் வருகிற 20-ந்தேதி திங்கட்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிகிறார்.

    20-ந்தேதி காலை 9 மணி அளவில் வாலாஜா டோல்கேட்டில் அவருக்கு மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகிய எனது தலைமையில் மாபெரும் எழுச்சி வரவேற்பு மாவட்ட கழக சார்பில் சிறப்பாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே திராவிட மாடல் ஆட்சிக் காணும் கழகத் தலைவர் தமிழக முதலமைச்சருக்கு சிறப்பாக வரவேற்க மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி, மாணவரணி, மகளிரணி, இலக்கிய அணி, தொண்டரணி, வழக்கறிஞரணி, விவசாய அணி, வர்த்தகரணி, நெசவாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, சிறுபான்மை நலப்பிரிவு, மருத்துவரணி, பொறியாளர் அணி, விவசாய தொழிலாளரணி, மகளிர் தொண்டரணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணியினர், தொ.மு.ச மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தண்டவாளத்தை கடந்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மோசூர் பகுதியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் நாக லிங்கம் (வயது 32). இவர்சென்னையில் தனியார் நிறுவனத் தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை மோசூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்துள்ளார்.

    அப்போது சென்னை யில் இருந்து பெங்களூரு செல் லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த அரக் கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப் - இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்தன் தலைமையிலான போலீசார், நாகலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோ ணம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்
    • போலீசார் விசாரணை.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தை அடுத்த கணப திபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜியின் மகன் புண்ணியகோட்டி (வயது 40). இவருக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக புண்ணியகோட்டி மனநலம் பாதிக் கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த தாகக் கூறப்படுகிறது. கடந்த 15-ந்தேதி புண்ணியகோட்டி தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    உடல் முழுவதும் பரவி எரிந்த தீயால் பலத்த தீக்காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு புண்ணிய கோட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சீட்டுகளை காண்பித்து பணம் வசூலித்தனர்.
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் பழனி பேட்டை பகுதிகளில் காட் டன் சூதாட்டம் நடைபெறுவ தாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டவுன் சப்- இன்ஸ்பெக்டர் முத்து ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் பழனிபேட்டை டி.என்.நகர், சோமசுந்தரம் நகர், உப்பரபாளையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பழனிபேட்டை பகுதியில் பெட்டிக்கடை ஒன்றில் காட்டன் சூதாட்ட சீட்டுகளை காண்பித்து சிலரிடம் பணம் வசூலித்து கொண்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதே போன்று பழனி பேட்டை பிரதான சாலை, புதுபேட்டை ஆகிய பகுதிகளில் சப்- இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது பழனிபேட்டை அங் காளம்மன் கோவில் அருகே காட்டன் சூதாட்ட சீட்டு களை வைத்து பணம் வசூலித்த பழனிபேட்டை பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்தனர். 2 பேரிடமும் அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×