என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்.காந்தி
மு.க. ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும்
- ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகிறார்
- அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
ராணிப்பேட்டை:
தி.மு.க. ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் அமைச்சர் காந்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மு.க.ஸ்டாலின் வருகை
ராணிப்பேட்டை பூட்டுத்தாக்கில் புதியதாக கட்டப்பட்டுள்ள சி.எம்.சி. அம்மருத்துவமனையை திறந்திடவும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தை திறந்திடவும் ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கவும் வருகிற 20-ந்தேதி திங்கட்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிகிறார்.
20-ந்தேதி காலை 9 மணி அளவில் வாலாஜா டோல்கேட்டில் அவருக்கு மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகிய எனது தலைமையில் மாபெரும் எழுச்சி வரவேற்பு மாவட்ட கழக சார்பில் சிறப்பாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே திராவிட மாடல் ஆட்சிக் காணும் கழகத் தலைவர் தமிழக முதலமைச்சருக்கு சிறப்பாக வரவேற்க மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி, மாணவரணி, மகளிரணி, இலக்கிய அணி, தொண்டரணி, வழக்கறிஞரணி, விவசாய அணி, வர்த்தகரணி, நெசவாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, சிறுபான்மை நலப்பிரிவு, மருத்துவரணி, பொறியாளர் அணி, விவசாய தொழிலாளரணி, மகளிர் தொண்டரணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணியினர், தொ.மு.ச மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.