என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் அருகே சென்னை வாலிபர்கள் 2 பேர் கிணற்றில் மூழ்கி பலி
- அரக்கோணம் அருகே உள்ள ஷா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 58).
- சொந்தமான விவசாய நிலம் அரக்கோணம் அருகே உள்ள காவனூர் கிராமத்தை ஒட்டி உள்ளது.
அரக்கோணம் அருகே உள்ள ஷா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 58). சென்னையில் ரெயில்வேயில் பணியாற்றி வந்த இவர் விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது இளைய மகன் ரோஷன் (வயது 28). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அரக்கோணம் அருகே உள்ள காவனூர் கிராமத்தை ஒட்டி உள்ளது. நேற்று முன்தினம் ரோஷன் அவருடன் பணியாற்றிய நண்பர் யுவராஜ் (38) என்பவருடன் காவனூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு வந்தனர்.
அதன்பின் இருவரும் சென்னை திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்களின் குடும்பத்தினர் இதுகுறித்து கிராமத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை காவனூர் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் ரோஷன், யுவராஜ் இருவரும் பிணமாக மிதந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் குளிக்கும் போது கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.