என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • தொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை (ஓட்டு வீடு) நள்ளிரவில் இடிந்து விழுந்தது.
    • அலமேலு படுத்திருந்த கட்டிலின் மீது மேற்கூரை விழுந்ததில் அவர் இடிபாடுக்குள் சிக்கி இறந்தார்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை பள்ளிக்கூட மேட்டுத்தெரு பகுதியில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. மனோகரன் அவரது தாய் அலமேலுடன் (89) வசித்து வந்தார்.

    தொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை (ஓட்டு வீடு) நள்ளிரவில் இடிந்து விழுந்தது. அலமேலு படுத்திருந்த கட்டிலின் மீது மேற்கூரை விழுந்ததில் அவர் இடிபாடுக்குள் சிக்கி இறந்தார்.

    இதுகுறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூதாட்டி உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரம் போராடி மூதாட்டி உடலை மீட்டனர்.

    அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 227 மனுக்கள் பெறப்பட்டது.
    • உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை குமரேஷ்வரன் தாங்கி, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெந்நார் கூட்டத்தில் பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

    மொத்தம் 227 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் சம்பந்தப் பட்ட துறை அலுவலரிடம் வழங்கப்பட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவி டப்பட்டது. கூட்டத்தில் துணை கலெக்டர்கள் சேகர், தாரகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேற்றில் தலை சிக்கிய பரிதாபம்.
    • போலீசார் விசாைணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியை ேசர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 58), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் தக்கோலத்தை அடுத்தவட்டுமுடையார் குப்பம் பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் புஷ்பராஜ் நிலத்திற்கு சென்று விட்டு நள்ளிரவு மோட்டர் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    தக்கோலம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நீரேற்று நிலையம் பகுதியில் வந்த போது புஷ்பராஜ் நிலைதடுமாறி அங்குள்ள விவசாய நிலத்தில் விழுந்தார்.

    அப்போது புஷ்பராஜின் தலை சேற்றில் சிக்கி மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் புஷ்பராஜை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

    இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப் ப செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தி.
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தில் ஒத்தவாடை பகுதியை சேர்ந்த பாலு இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இரண்டு ஆண் பிள்ளைகள் பாலும் அவர் மனை சவிதாவும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவருடைய மூத்த மகள் ரஞ்சனி நாகவேடு பகுதியில் இருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் நேற்று அதற்கான முடிவுகள் வெளிவந்தது. இதில் ரஞ்சனி கணிதம் மற்றும் சமூக அறிவியலில் தேர்ச்சி பெறவில்லை இதனால் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் அவருடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிணத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ராணிபேட்டை மாவட்டத்தில் 2-ம் இடம் பிடித்தார்.
    • மாணவிக்கு பாராட்டு குவிந்தது.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம்சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டு போலீஸ் லைன் பகுதியை ஆட்டோ ஓட்டுனர் யுவராஜ் மகள் சர்மிலி பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிப் பெற்றார். இவர் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கள் 500-க்கு 492 மதிப்பெண் பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாம் இடமும் சோளிங்கரில் முதலிடமும் பெற்றது.

    இதனை ஒட்டி இந்த மாணவியை பாராட்டும் விதமாக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஏஎல் சாமி, 9 வார்டு உறுப்பினர் ஏ.எல்.மணிகண்டன் சார்பில் மாணவி சர்மிலியை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து மாணவிக்கு பொண்ணாடை போர்த்தி பரிசு பொருள் மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்கள்.

    • அரக்கோணத்தில் 77 மி.மீ. மழை பதிவானது.
    • கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த பகுதிகளில் நீண்ட நேரம் மழை பெய்ததால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக அரக்கோணத்தில் 77 மில்லி மீட்டர், சோளிங்கரில் 62 மீட்டர் மழையும் பதிவானது.

    ஆற்காடு, வாலாஜா பகுதிகளிலும் கனமழை பெய்தது. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மழைநீர் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வாலாஜா 30.3, ஆற்காடு 33, காவேரிப்பாக்கம் 47, அம்மூர் 26, கலவை 38.2,அரக்கோணம் 77, சோளிங்கர் 62. 

    • கண் பார்வை பறி போன நிலையிலும் சாதனை
    • மேற்படிப்புக்கு உதவி செய்வதாக அமைச்சர் ஆர்.காந்தி உறுதி.

    சோளிங்கர்:

    தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 5-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 10,12 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.இதில் விடைத்தாள் திருத்தம் முடிக்கப்பட்டு 10, 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்‌ வெளியானது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எள்ளுப்பாறை பகுதியை சேர்ந்த தமிழ்செல்வியின் மகள் யோகலட்சுமி 12 ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் உடல்நல குறைபாட்டால் இவரின் கண்பார்வை குறைய தொடங்கியது பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் கண்பார்வை முழுமையாக இழந்த நிலையில் தன்னம்பிக்கை யோடு இவர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வெற்றிப்பெற்றவர்.

    இந்த மாணவி 600 மதிப்பெண்ணுக்கு 443 மதிப்பெண் பெற்றார். இவரை பாராட்டும் வகையில் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் கண்பார்வை இழந்த மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தன்னம்பிக்கை யோடு படித்து தேர்வு எழுதி மாணவி வெற்றிப்பெற்றதை ஆய்வாளர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.மாணவிக்கு கேக் வெட்டிக் பொண்ணாடை போர்த்தி ரொக்கபரிசு வழங்கினார்.அப்போது உதவி ஆய்வாளர்கள் மோகன், ரவி மற்றும் போலீ–்சார் உடனிருந்தனர்.

    அமைச்சர்கள் மா சுப்பிரமணி ஆர்.காந்தி எம்பி ஜெகத்ரட்சகன், ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நாகராஜ் ஆகியோர் மாணவியை நேரில் பார்த்து ஆறுதல் கூறி பாராட்டு தெரிவித்தனர். மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர். பண உதவி வழங்கினார்.

    மேலும் மாணவியின் கோரிக்கை ஏற்று அமைச்சர் ஆர்.காந்தி மேற்படிப்புக்கு உதவி செய்வதாக தெரிவித்தார்.

    • வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை இந்திராநகர் அணைக்கட்டு ரோட்டை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் வினோத் (வயது 40), கூலித்தொழிலாளி.

    இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் மனைவி, தாய் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத் துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்.
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டைமாவட்டம் ஆற்காடு பெரிய அசேன்புரா பகுதியை சேர்ந்தவர் முகமது இம்ரான் (வயது 23). கார் டிரைவரான இவர் கடந்த 16 - ந்தேதி இரவு ஆற்காடு பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். லுவை அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் திடீரென முகமது இம்ரான் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆற் காடு அரசு மருத்துவமனையி லும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் . இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலில் கணபதி ஹோமம், நான்கு கால பூஜைகள் நடந்தது.
    • மாலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் பள்ளாங்குட்டை யில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலில் கணபதி ஹோமம், நான்கு கால பூஜை கள் நடந்தது.

    யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் பொன்னியம்மன் கோவில் விமான கோபுரத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி மகா கும்பா பிஷேகத்தை நடத்தினர் . மாலை அம்மனுக்கு திருக்கல் யாணம் நடந்தது.

    அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகர வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதி உலாவுக்கு முன் னால் செண்டை மேளம் இசைக்கப்பட்டது. வாண வேடிக்கைகள் நடந்தது.

    விழாவை பொன்னியம் மன் ஆலய அறக்கட்டளை குழுவினர் செங்குந்தர் மரபினர், ஊர் பொதுமக்கள் முன் னின்று நடத்தினர்.

    • கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • அரக்கோணத்தில் 67 மி.மீ. மழை பதிவானது

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இந்த பகுதிகளில் நீண்ட நேரம் மழை பெய்ததால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக அரக்கோணத்தில் 67 மில்லி மீட்டர், சோளிங்கரில் 52 மீட்டர் மழையும் பதிவானது.

    ஆற்காடு, வாலாஜா பகுதிகளிலும் கனமழை பெய்தது. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மழைநீர் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆற்காடு 22.2, காவேரிபாக்கம் 30, அம்மூர் 19, கலவை 25.2, அரக்கோணம் 67, சோளிங்கர் 52,

    • சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்.
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்தவர் அபிஸ் அன்சாரி. இவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடித்து நேற்று இரவு காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல ரெயிலில் புறப்பட்டார்.

    அப்போது அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே வந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருந்தனர். இந்த நிலையில்தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அபிஸ் அன்சாரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை அரக்கோணம் ரெயில்வே போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரக்கோணம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×