என் மலர்
ராணிப்பேட்டை
- செல்போன் டார்ச்லைட் மூலம் சென்றனர்
- பெண்கள், வயதானவர்கள் கடும் பாதிப்பு
அரக்கோணம்:
அரக்கோணம் அரக்கு ெரயில்நிலையத்தில் நடைமேடை களிலிருந்து வெளியேறவும் உள்ளே வரவும் மேம்பாலம் உள்ளது மேம்பாலத்தில் இருந்து நடைமேடை களுக்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளது.
நேற்று இரவு முதல் 9 மணி வரை மின் விளக்கு துண்டிக்கப்பட்டது. மின் விளக்கு எரியாததால் ெரயிலில் வந்த பயணிகள் ெரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்ல கடும் அவதிக்குள்ளாகினர்.
பெண்கள் வயதானவர்கள் குழந்தைகள் என குடும்பத்தோடு பல வந்த நிலையில் நடைமேடையில் இருந்து படிக்கட்டுகளை ஏறி மேம்பாலத்தில் ஊர்ந்து சென்று ெரயில் நிலையத்தில் இருந்து வெளியேறினர்.
மேலும் பயணிகள் தங்கள் செல்போனின் வாயிலாக விளக்கை இயக்கச் செய்து ெரயில் நிலையத்தில் இருந்து வெளியேறினர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
மின்தடை ஏற்பட்டவுடன் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய ெரயில்வே நிர்வாகம் மெத்தனம் காட்டியது இனிவரும் காலங்களிலாவது அரக்கோணம் ெரயில் நிலையத்தில் மின் பயன்பாட்டை சரியாக பராமரித்து பயணிகளுக்கு உதவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- போலீஸ் நிலையத்தில் புகார்
- டிராக்டரை சோதனை செய்தனர்
நெமிலி :
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அவளூர் கிராமத்தில் ஆதி காளி அம்மன் கோயில் அருகே பல மணி நேரமாக கேட்பாரற்று டிராக்டர் ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக சென்ற அவலூர் தனிப்பிரிவு போலீசார் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த டிராக்டரை சோதனை செய்தனர்.
அந்த டிராக்டர் திருவள்ளூர் மாவட்டம் பகுதியை சேர்ந்த கன்னியப்பன் (வயது 59) விவசாயி. என்பவருடைய டிராக்டர் தெரியவந்தது.
அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது டிராக்டர் திருடு போய்விட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் டிராக்டரை ஓட்டி சென்றவர்கள் டீசல் இல்லாததால் ரோட்டில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த வாகனத்தில் உள்ள பதிவு எண்ணை கொண்டு உரிமையாளரை அழைத்து அவரிடம் இந்த டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு தனிப்பிரிவு போலீசார் சீனிவாசனை அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி மற்றும் ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் ஆகியோர் பாராட்டினர்.
- நிலம், பயிர்களுக்கு 10 மடங்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தினர்
- ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமும், ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டமும் நேற்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிட்டு தலைமை தாங்கி னார். மாநிலக்குழு பெருமாள், மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, மாவட்ட பொருளாளர் ராதா கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் உயர் மின் அழுத்த கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலம், பயிர்களுக்கு அரசாணை யின்படி 10 மடங்கு இழப்பீடு வழங்கக்கோரியும், மாத வாடகை, கிணறு, ஆழ்துளை கிணறு கட்டிடங்களுக்கு வருவாய் கிராமத்தில் அதிகபட்ச மதிப்பீட்டை கணக்கில் கொண்டு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ராணிப்பேட்டை முத்துக்க டையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனை தொடர்ந்து அனைவரும் மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.
அங்கு கூட்டமாக மனு கொடுக்க அனுமதி இல்லை பிரதிநிதிகள் மட்டும் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகள் கோரிக்கை ஏற்கப்பட்டு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அனைவரிடமும் மனுக்களை பெற்றார்.
- மகள் திருமணம் நடக்க இருந்த நிலையில் பரிதாபம்
- போர்வெல் மோட்டார் சுவிட்சை போட்டபோது விபரீதம்
அரக்கோணம் :
அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள அருந்ததி பாளையத்தை சேர்ந்தவர் வீராசாமி (வயது 68). லாரி கிளீனர். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், மகள் பார்வதிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. அவருக்கு இன்று திருமணம் நடக்க இருந்தது. இதனால், உறவினர்கள்மற்றும் அக்கம்பக்கத்தினர் என்று ஏராளமானவர்கள் வீட்டு வந்து சென்று கொண்டிருந்தனர்.
இதனால், வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் வீராசாமி நேற்று ஈடுபட்டார். வீட்டை கழுவி விடுவதற்காக போர்வெல் மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக வீராசாமி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயமடைந்த அவரை அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடிந்தால் மகளை திருமண கோலத்தில் பார்க்க ஆசைப்பட்ட தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அரக்கோணத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்து நடந்தது
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
ராணிப்பேட்டை :
மத்திய அமலாக்கத்துறை ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும் மேலும் அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ராணி ப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை வேம்புலியம்மன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடை பெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பா ட்டத்திற்கு ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகிகள் மோகன், நாகேஷ், வசீகரன் நியாஸ், நகர நிர்வாகிகள் உத்தமன், மோகனசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
- நிலை தடுமாறி திடீரென சாலையில் விழுந்தார்.
- போலீஸ் விசாரணை
சோளிங்கர் :
அரக்கோணம் அடுத்த சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (வயது 54) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவர் கடந்த 19-ந் தேதி சின்னகைனூரிலிருந்து சோளிங்கர் நோக்கி தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
சோளிங்கர் அடுத்த கூடலூர் சமத்துவபுரம் அருகே வரும்போது நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி திடீரென சாலையில் விழுந்தார்.
அதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொண்ட பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அதிகாரிகளிடம் பல முறை புகார்
- மழையால் சாலையில் அரிப்பு காரணமாக பள்ளம்
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் நெமிலி செல்லும் சாலையில் ஒத்தவாடை தெரு அருகே குறுகலாக உள்ள பகுதியின் வழியே பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன.
சாலையின் குறுக்கே மழை நீர் செல்வதற்காக சரிவாக சாலை அமைத்து இருப்பதாக கூறப்படும் இடத்தில் அவ்வப்போது வாகனங்கள் சிக்கி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையால் சாலையில் அரிப்பு காரணமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை மின்னல் நோக்கி வந்த தனியார் பஸ் சக்கரம் அந்த பள்ளத்தில் சிக்கியது. சம்பவ இடத்திற்கு வந்த அரக் கோணம் ஒன்றிய கவுன்சிலர் கோமதி பிரசாத், மின்னல் ஊராட்சி மன்ற தலைவர் கோபி மற்றும் பொது மக்களும் சரி செய்தனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
- வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக் கடை அருகே உள்ள வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி ( வயது 36 ). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜீவ்காந்தி பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் எதனால் தூக்குப் போட்டுக் கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற 24-ந் தேதி நடக்கிறது
- தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கள பிரச்சனைகளை களைத்திட கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம். விவசாயிகள் தங்கள் விவரங்களை காலை 10 மணிக்கு பதிவு செய்திட வேண்டும்.
மேலும் ஜூலை 2022 மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று வட்ட அளவிலும், இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று கோட்ட அளவிலும், மூன்றாம் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும்.இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
- 13 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன
- விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு என 13 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பள்ளி மாணவர் விடுதிகள்-5, பள்ளி மாணவியர் விடுதிகள் -4, கல்லூரி மாணவர் விடுதி -1, கல்லூரி மாணவியர் விடுதிகள் -3 ஆகும்.
பள்ளி விடுதிகளில் 4 -ம் வகுப்பு முதல் பிளஸ் -2 வரை பயில்கின்ற மாணவர்/மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சிறுபான்மையினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவர்/மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவர்/மாணவிகளுக்கு உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. வரை பயிலும் மாணவர்/மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவர்/மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
தகுதியுடைய மாணவ /மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொருத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
கல்லூரி விடுதி களைப் பொருத்தவரை 31.7.22-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.எனவே மாணவ -மாணவியர் அரசின் சலுகைகளை பெற்று பயன்பெறலாம்.இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
- அரக்கோணத்தில் பலத்த மழை
- ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவரா ஜப்பேட்டை பள்ளிக்கூட மேட்டுத்தெரு பகுதியில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. மனோகரன் அவரது தாய் அலமேலுடன் (89) வசித்து வந்தார். தொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை (ஓட்டு வீடு) நள்ளிரவில் இடிந்து விழுந்தது. அலமேலு படுத்திருந்த கட்டிலின் மீது மேற்கூரை விழுந்ததில் அவர் இடிபாடுக்குள் சிக்கி இறந்தார்.
இதுகுறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூதாட்டி உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி மூதாட்டி உடலை மீட்டனர். அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் செல்போன்கள் பரிசாக வழங்கப்பட்டது.
- 400-க்கும் அதிகமாக 35 மாணவர்களும் மார்க் எடுத்துள்ளனர்.
அரக்கோணம்:
பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் விவேகா னந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது. இப்பள்ளியில், பிளஸ்-2 தேர்வில் மொத்தம் 132 பேர் எழுதினர். இதில் 589 மார்க் பெற்று தர்ஷினி. முதலிடமும், தமயந்தி (579) இரண்டாமிடமும், பிரியதர்ஷினி (578) 3-ம் இடத்தையும்பிடித்துள்ளனர். இதுதவிர கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 4 பேரும், வணிகவியல் பாடத்தில் 3 பேரும், அக் கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் தலா ஒருவரும் நூறு மார்க் பெற்று சாதனை படைத் துள்ளனர். இதுதவிர 550 மார்க் குக்கும் அதிகமாக 25 500-க்கும்மேல் 450 க்கும் பேரும், 40 பேரும், அதிகமாக 37 மாணவ, மாணவிகளும் மார்க் பெற்றுள்ளனர். 120 10 -ம் வகுப்பு முடிவுகள் இப்பள்ளியில் பேர் பத்தாம் வகுப்பு தேர் வெழுதினர். அவர்களில் முதல் மூன்று இடங்களில், வர்ஷா (490), சுஷ்மிதா (474), லோகேஷ் (472)வென்றனர். மேலும், அறிவியல் பாடத்தில் 10 மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் ஒருவர் என்று 11 பேர் நூறு மதிப்பெண் பெற்றனர். மேலும், 450-க்கும் அதிகமாக 11 மாணவர்களும், 400-க்கும் அதிகமாக 35 மாணவர்களும் மார்க் எடுத்துள்ளனர். தேர்வில் இடங்களை முதல் 3 பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் சுப்ரமணியம், கூடுதல் தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர் ராஜன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். முதல் மாணவர்களுக்கு நிர்வாகத்தின் செல்போன்கள் பள்ளி சார்பில் பரிசாக வழங்கப்பட்டது.
இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 120 மாணவர்களும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாணவி வர்ஷா 490 /500 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். சுஷ்மிதா 474/ 500 2-ம் இடம் பிடித்தார். மாணவர் லோகேஷ் 472 /500 மதிப்பெண் பெற்ற சாதனை படைத்துள்ளனர்.
450 மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவர்களும், 400க்கு மேல் 35 மாணவர்களும் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பாட வாரியாக 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியலில் 10 பேரும் சமூக அறிவியலில் 1 மாணவரும் எடுத்துள்ளனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் அம்பாரி சுப்பிரமணியம் பரிசுகளை வழங்கி பாராட்டினார். கூடுதல் தாளாளர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் ராஜன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் உடனிருந்தனர்.






