search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறப்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    பிறப்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

    • 13 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன
    • விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு என 13 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பள்ளி மாணவர் விடுதிகள்-5, பள்ளி மாணவியர் விடுதிகள் -4, கல்லூரி மாணவர் விடுதி -1, கல்லூரி மாணவியர் விடுதிகள் -3 ஆகும்.

    பள்ளி விடுதிகளில் 4 -ம் வகுப்பு முதல் பிளஸ் -2 வரை பயில்கின்ற மாணவர்/மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சிறுபான்மையினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவர்/மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

    விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவர்/மாணவிகளுக்கு உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. வரை பயிலும் மாணவர்/மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவர்/மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

    தகுதியுடைய மாணவ /மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொருத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

    கல்லூரி விடுதி களைப் பொருத்தவரை 31.7.22-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.எனவே மாணவ -மாணவியர் அரசின் சலுகைகளை பெற்று பயன்பெறலாம்.இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    Next Story
    ×