என் மலர்

  நீங்கள் தேடியது "The railway administration was reluctant to arrange a replacement"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செல்போன் டார்ச்லைட் மூலம் சென்றனர்
  • பெண்கள், வயதானவர்கள் கடும் பாதிப்பு

  அரக்கோணம்:

  அரக்கோணம் அரக்கு ெரயில்நிலையத்தில் நடைமேடை களிலிருந்து வெளியேறவும் உள்ளே வரவும் மேம்பாலம் உள்ளது மேம்பாலத்தில் இருந்து நடைமேடை களுக்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளது.

  நேற்று இரவு முதல் 9 மணி வரை மின் விளக்கு துண்டிக்கப்பட்டது. மின் விளக்கு எரியாததால் ெரயிலில் வந்த பயணிகள் ெரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்ல கடும் அவதிக்குள்ளாகினர்.

  பெண்கள் வயதானவர்கள் குழந்தைகள் என குடும்பத்தோடு பல வந்த நிலையில் நடைமேடையில் இருந்து படிக்கட்டுகளை ஏறி மேம்பாலத்தில் ஊர்ந்து சென்று ெரயில் நிலையத்தில் இருந்து வெளியேறினர்.

  மேலும் பயணிகள் தங்கள் செல்போனின் வாயிலாக விளக்கை இயக்கச் செய்து ெரயில் நிலையத்தில் இருந்து வெளியேறினர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

  மின்தடை ஏற்பட்டவுடன் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய ெரயில்வே நிர்வாகம் மெத்தனம் காட்டியது இனிவரும் காலங்களிலாவது அரக்கோணம் ெரயில் நிலையத்தில் மின் பயன்பாட்டை சரியாக பராமரித்து பயணிகளுக்கு உதவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  ×