என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
தக்கோலத்தில் மணல் குவாரியை எதிர்த்து முழு கடையடைப்பு
- பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்
- எதிர்ப்பை மீறி மணல் குவாரி அனுமதித்தால் தொடர் போராட்டம்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் அங்கு மணல் குவாரி அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தக்கோளத்தில் வியாபாரிகள் இன்று அப்பகுதியில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
தக்கோலத்தில் மணல் குவாரி அமைத்தால்அதை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பாதிப்படைவர் அதுமட்டுமல்ல தக்கோலம் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இங்கிருந்து தான் குடிநீர் அனுப்பப்படுகின்றது.
குறிப்பாக அரக்கோணம் நகராட்சிக்கு வாழ்வதற்கான குடிநீரை இப் பகுதியிலிருந்துதான் அனுப்புவதாகவும் இதனால் விவசாயிகள் மட்டுமல்ல பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இதனால் இங்கு மணல் குவாரி அமைக்க கூடாது என்றனர்.
பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி மணல் குவாரி அனுமதிக்கப்பட்டால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.






