search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையில் மாணவர்களுக்கு செஸ் போட்டி
    X

    ராணிப்பேட்டையில் மாணவர்களுக்கு செஸ் போட்டி

    • 118 மாணவர்கள் மற்றும் 43 மாணவிகள் பங்கேற்றனர்.
    • 25 மாணவிகளுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ராணிப்பேட்டை:

    44-வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி சென்னை மகாபலிபுரத்தில் வருகிற 28.7.22-ந் தேதி முதல் 10.8.22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 11, 12-ந் தேதிகளில் (சனி, ஞாயிற்றுக் கிழமை) 2 நாட்கள் ஆற்காடு ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது.

    இதில் வெற்றி பெறும் ஆண் மற்றும் பெண் போட்டியாளர் 44-வது சர்வதேச சதுரங்க போட்டியை நேரில் காணும் வாய்ப்பு பெறுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 118 மாணவர்கள் மற்றும் 43 மாணவிகள் பங்கேற்றனர்.

    இப்போட்டியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, ஆற்காடு நகர மன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

    இதில் முதல் 25 இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் 25 மாணவிகளுக்கு ஒலிம்பியாட் சின்னம் பொறித்த பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மாணவர் பிரிவில் ரிஷிகேஷவா, மாணவிகள் பிரிவில் ஸ்ரீ சாத்விகா ஆகியோர் முதலிடம் பிடித்து, சர்வதேச சதுரங்க போட்டியை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ராணிப்பேட்டை மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் விஜயகுமார், செயலாளர் அப்துல் கரீம், பொருளாளர் சோழவேந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×