என் மலர்
ராணிப்பேட்டை
- நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிக்கான குறை தீர்வு முகாம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளி களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சான்று வழங்கினர். பின்னர் 172 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
57 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பதிவு, 72 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டது. 158 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.12.5 ஆயிரம் மதிப்பில் செயலிகளுடன் கூடிய திறன் பேசியும், 2 பேருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் நடை பயிற்சி உபகரணம், ரூ.50ஆயிரம் மதிப்பில் செயற்கை கால் ஒருவருக்கும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.மேலும் ஒருவருக்கு ரூ.5ஆயிரம் மதிப்பில் காது காதொலி கருவி வழங்கினார்.
முகாமில் பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்களுக்கு கலெக்டர் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனம் மூலமாக மதிய உணவு வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், மாற்றுத்திறனாளிகள் நல சங்க அலுவலக பணியாளர்கள், மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொண்டனர்.
- ரூ.10ஆயிரம் சொந்த பணத்தில் காவலர் ஒருவரை நியமித்திட உத்தரவிட்டார்
- உணவை சாப்பிட்டு பார்த்து தரம் குறித்து விசாரணை
ராணிப்பேட்டை :
ராணிப்பேட்டை நகராட்சி காரையில் உள்ள அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் கைத்தறி மற்றும் துறை அமைச்சர் காந்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனி பள்ளியில் தற்போது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 221 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழ் மற்றும் தாவரவியல் பாடங்களுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது அமைச்சர் காந்தி ஆதிதிராவிட நலத்துறை ஆணையரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆசிரியர் நியமனத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இப்பள்ளியில் தண்ணீரின் தேவைக்காக புதிய ஆழ்துளை கிணறு அமைக்கவும் உத்தரவிட்டார்.பள்ளியில் ஏற்படும் திருட்டை தடுக்க ரூ.10ஆயிரம் சொந்த பணத்தில் காவலர் ஒருவரை நியமித்திட உத்தரவிட்டார்.
அதற்கான சம்பளத்தை தானே தருவதாகவும் அமைச்சர் காந்தி தெரிவித்தார். சுற்றுச்சுவர் கட்ட தேவையான நிதியினை அரசிடம் கேட்டு பெற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி மாணவ மாணவிகள் அமர சொந்த நிதியிலிருந்து 50 மேஜைகள் வாங்கி தரப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியினை ஆய்வு செய்தார். இந்த விடுதியில் 39 மாணவிகள் தங்கி படித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் சென்ற போது அங்கு மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
மாணவிகளிடம் உணவு தரத்தை கேட்டறிந்த அமைச்சர் உணவை தானே சாப்பிட்டு பார்த்து உணவு தரமாகவும் ருசியாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இளவரசி, ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செழியன், துணைத் தலைவர் பூங்காவனம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அரசு பள்ளி, தனியார் பள்ளி என அனைத்தும் சேர்ந்து 1 கோடியே 30 லட்சம் மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்.
- பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அடுத்த குழந்தைகளோடு ஒப்பிட வேண்டாம்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் ஜி.கே.உலக பள்ளியில் ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனை எவ்வாறு முன்னோக்கி செல்வது என்பது குறித்தும், மாணவ, மாணவிகளின் தேர்ச்சியை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கு முன்பு 5 நாள் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யும் திட்டம் முதல் அமைச்சரிடம் ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒருசில காரணங்களுக்காக மாணவ-மாணவிகள் தவறான முடிவுகளை எடுப்பது குறையும்.
மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வகுப்பில் பெறுகின்ற மதிப்பெண் மட்டுமே மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்காது. மாணவ-மாணவிகள் கவனத்தை ஒழுங்குப்படுத்தி படிப்பில் முழு கவனத்தினை செலுத்துவதற்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் கலை நிகழ்ச்சிகள், மாதம் ஒருமுறை திரைப்படம் காண்பித்தல், மன அழுத்தத்தை போக்கி தன்னம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்தி இதில் வெற்றி பெறுபவர்களை வெளிநாடு அழைத்துச் செல்வதற்கு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றோம். இத்திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும்.
கல்வித்துறையில் பழைய நடைமுறையை மாற்றி புதிய நடைமுறைகளை கொண்டு வந்திருக்கின்றோம். அரசு பள்ளி, தனியார் பள்ளி என அனைத்தும் சேர்ந்து 1 கோடியே 30 லட்சம் மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமையாக உள்ளது.
எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளனவோ, அவைகள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும்.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அடுத்த குழந்தைகளோடு ஒப்பிட வேண்டாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அதனைப் பெற்றோர்கள் உணரவேண்டும்.
நான் முதல்வன் திட்டமும் இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் வெற்றியை நிலைநிறுத்த மாணவ-மாணவிகளுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக்கூடாது. மாணவர்களை, ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள் போல் அக்கறை கொண்டு அவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து அரசு உத்தரவினை மீறி பள்ளிகளை திறக்காமல் இருந்த 981 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற 23-ந் தேதி நடக்கிறது
- கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 16 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) ராணிப்பேட்டையில் உள்ள இ.ஐ.டி. பாரி மைதானத்தில் நடைபெற உள்ளது. 16 வயதிற்கு உட்பட்டோர் தேர்வு காலை 8 மணிக்கும், 19 வயதிற்கு உட்பட்டோர் தேர்வு மதியம் 1 மணிக்கும் நடைபெறும். தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வீரர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் வர வேண்டும்.
இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
- 3 பவுன் நகையை திருடி சென்றனர்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் அமர்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி.
இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஈஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.
பின்னர் நேற்று சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு வந்தார். வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகையை மர்ம கும்பல் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்
சோளிங்கர்:
சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு செஸ் போட்டி நடந்தது சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
அந்த போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட சார்பில் மாணவ மாணவிகளை தேர்வு செய்யும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மாவட்ட அளவிலான மாணவ மாணவிகளுக்கு செஸ் போட்டி மாவட்ட ஆட்சித் தலைமையில் போட்டியை துவக்கி வைத்தார்.
மாவட்டம் முழுவதும் 1462 மன மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் போட்டி கலந்து கொள்ள உள்ளனர். இதேபோல சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் மாவட்ட செஸ் போட்டி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் மேரிஷெரின் தலைமை தாங்கினார். சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைதத்தார்.
செஸ் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் இருந்து 196 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அப்போது காங்கிரஸ் நகர தலைவர் கோபால் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- 3 மணிநேரம் பெய்தது
- அதிகபட்சமாக கலவையில் 45 மி.மீ. கொட்டியது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சோளிங்கர் மற்றும் கல்பட்டு, சோம சமுத்திரம், மோட்டூர், கொண்டபாளையம், எரும்பி, உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம சுற்றுப்பகுதியில் காலை முதலே வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து மாலை கருமேகங்கள் சூழ்ந்து 3 மணிநேரம் மிதமான மழை பெய்து இரவு முழுவதும் லேசான மழை பெய்து. மாவட்டம் முழுவதும் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அரக்கோணத்தில் 1.20, காவேரிப்பாக்கத்தில் 25, வாலாஜாவில் 6.40, அம்மூரில் 3, சோளிங்கரில் 39, கலவையில் 45.80 மழை பதிவாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக கலவையில் 45 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழை பொழிவால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஒன்றியகுழு கூட்டத்தில் தீர்மானம்
- பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தலைமையில், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் நம்முடைய ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்க ப்பட்டது. ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேவைக்கேற்ப சிமெண்ட் சாலைகள் அமைத்தல், குடிநீர் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை சுமார் 1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.
பொது மக்களின் கோரிக்கைகளை ஏற்று கிராமப்புறங்களில் புதியதாக பகுதிநேர ரேசன் கடைகளை அமைக்க கலெக்டரிடம் கோருவதெனவும், கட்டிட வசதி இல்லாமல் வாடகை கட்டிடங்களில் இயங்கும் சேரன் கட்டிடங்களை கட்டித்தருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், பொறியாளர் ராஜேஷ், வேளாண்மை துறை, மருத்துவதுறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- முன்விரோதத்தால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள கட்டைமேடு பகுதியை சேர்ந்த ராம்கி வயது (33) ஆட்டோ டிரைவர்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாரத் (34) ஆட்டோ டிரைவர் ஆகிய 2 பேருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர்.
அப்போது ராம்கி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாரத் மீது சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்தார் இவரை மற்ற ஆட்டோ டிரைவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பாரத் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் ராம்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது
- அசம்பாவிதம் ஏற்படும் முன் இடித்து அகற்ற வலியுறுத்தல்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள செய்யாறு சாலையில் கிராம நிர்வாக அலுவலகம் , வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ஆகியவை செயல்பட்டு வருகின்றன . இந்த அலுவலகங்களுக்கு தினசரி 50 - க்கும் மேற் பட்டோர் வந்து செல்கின்றனர் .
இதன் அருகிலேயே சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பழுதடைந்து பயன் பாட்டில் இல்லாததுணை தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் உள்ளது . இந்த கட்டிடம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது .
பாழடைந்த இந்த கட்டி டம் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது . கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வரும் நபர்கள் தெரியாமல் இந்த பாழடைந்த கட்டிடத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை விடுவதும் , அமர்ந்திருப்பதும் வாடிக்கையாக உள்ளது .
இந்தக் கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை உணர்த்த கட்டிடத்தின் முன்பு கடமைக்காக கயிறு கட்டி உள்ளனர் . இந்த கட்டிடம் இடிந்து விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படுவ தற்கு முன் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
- உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்தார்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக் கம் அருகே உள்ள நங்கமங்க லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சடகோபன் ( வயது 50 ) , விவ சாயி .
இவர் கடந்த சில நாட்களாக உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்துள்ளார் . இந்த நிலையில் கடந்த 16 - ந் தேதி நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த விஷத்தை குடித் துள்ளார் .
ஆபத்தான நிலை யில் இருந்த அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந் தார் . இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
- மாயமானவர் வீடு திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த கணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 47) இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது .
இந்நிலை யில் கடந்த 17 - ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் பச்சையம்மாள் பிணமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் திமிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பச்சையம்மாள் சாவு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






