search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோளிங்கரில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    சோளிங்கரில் பெய்த மழையில் வாகன ஓட்டிகள் நனைந்து சென்ற காட்சி.

    சோளிங்கரில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • 3 மணிநேரம் பெய்தது
    • அதிகபட்சமாக கலவையில் 45 மி.மீ. கொட்டியது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    சோளிங்கர் மற்றும் கல்பட்டு, சோம சமுத்திரம், மோட்டூர், கொண்டபாளையம், எரும்பி, உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம சுற்றுப்பகுதியில் காலை முதலே வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    தொடர்ந்து மாலை கருமேகங்கள் சூழ்ந்து 3 மணிநேரம் மிதமான மழை பெய்து இரவு முழுவதும் லேசான மழை பெய்து. மாவட்டம் முழுவதும் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அரக்கோணத்தில் 1.20, காவேரிப்பாக்கத்தில் 25, வாலாஜாவில் 6.40, அம்மூரில் 3, சோளிங்கரில் 39, கலவையில் 45.80 மழை பதிவாகியுள்ளது.

    இதில் அதிகபட்சமாக கலவையில் 45 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    தொடர் மழை பொழிவால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×