என் மலர்
ராணிப்பேட்டை
- மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
மின் கட்டண உயர்வை கண்டித்து ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ராணிப்பேட்டை நகர செயலாளர் சந்தோஷம் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சம்பத், சந்திரசேகர், விகேஆர்.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- துண்டு பிரசுரம் ஆணையர் வழங்கினார்
- நகராட்சி ஊழியர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் நகராட்சி ஆணையர் லதா தலைமையில் அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் மக்கும் குப்பை , மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . முன்னதாக பொது மக்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் தூய்மைக்கான உறுதி மொழி எடுத்து கொண்டனர் .
தொடர்ந்து அசோக் நகர் குடிநீர் ஏற்றும் நிலையத்தில் மரக் கன்றுகள் நடும் விழாவும் , ஏ.என்.கன்டிகை பகுதியில் மழைநீர் கால்வாய் தூய்மை பணியும் மேற்கொண்டனர் . நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம் , சுகாதார அலுவலர் மோகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் .
- மரம் நடப்பட்டது
- மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
பனப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் கீழ், நீர்நிலைகளின் கரைப்பகுதி சுத்தம் செய்தல், மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்தல் மற்றும் பொது இடங்களில் மரம் நடுதல் உள்ளிட்ட பணிகள் நடை பெற்றது.
இதில் பள்ளி மாணவர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது
- அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2022-23-ம் ஆண்டிற் கான பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலம் பயிர் மதிப்பீட்டாய்வு திட் டம் குறித்து வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வரு வாய் துறையினருக்கு 2 நாட்கள் பயிற்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண் டியன் தலைமை தாங்கி, பயிற் சியை தொடங்கி வைத்தார்.
பயிற்சியில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை துறைகளை சேர்ந்த களப்பணியாளர்களுக்கு பயிர் அறுவடை பரிசோ தனை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குனர் ( பொறுப்பு) விஸ்வநாதன், புள்ளியியல் துணை இயக்கு னர் ஆறுமுகம், வேளாண்மை துணை இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன், புள்ளியியல் உதவி இயக்குனர் ஸ்ரீதர் மற் றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது
ராணிப்பேட்டை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முன்னதாக தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 850 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
- 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது
- 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் 75-வது சுதந்திரத்தை முன்னிட்டு ெரயில்வே பாதுகாப்பு படை சார்பாக பல்வேறு போட்டிகளையும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி முதல் ஐதராபாத் வரை இருசக்கர வாகனத்தில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணி கன்னியாகுமரி தொடங்கப்பட்டு சென்னை வழியாக அரக்கோணத்திற்கு வந்தது. அவர்களை அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையாளர் பெரித் மற்றும் அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் உஸ்மான் வரவேற்றனர்.
பின்னர் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை உதவி ஆணையாளர் பெரித் தொடங்கி வைத்தார்.
இதில் அரக்கோணத்தை சேர்ந்த ெரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ெரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
- கவுன்சிலிங் கூட்டத்தில் வலியுறுத்தல்
- பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வரவும் அறிவுறுத்தல்
அரக்கோணம்:
அரக்கோணம் ெரயில் நிலையம் அருகில் தனியார் திருமண மகாலில் எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் ெரயில் நிலைய அதிகாரிகள் கவுன்சிலிங் கூட்டம் நடைபெற்றது.
இக்கவுன்சிலிங் கூட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ் ஜான்சன், தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசுகையில் ெரயில்வே நிர்வாகம் தனியார் மையம் மற்றும் கார்ப்பரேட் ஆக்குவதை குறித்து எதிர்ப்பு தெரிவித்து அதனால் வரும் விளைவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒவ்வொரு ெரயில் நிலையங்களில் உள்ள ெரயில்வே நிலைய அதிகாரி காலி படையிடங்களை உடனடியாக பூர்த்தி செய்வது குறித்தும், ெரயில் நிலைய அதிகாரிகள் பற்றாக்குறையால் பணியில் இருக்கும் ெரயில் நிலைய அதிகாரிகளின் அதிக வேலை பளு காரணமாக ஓய்வில்லாமல் பணியில் இருப்பதால் மன அழுத்தம் ஏற்படுதாகவும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வரக் கோரியும், விருப்ப மாறுதல் கேட்பவர்களுக்கு அனுமதி வழங்கி ஆணை வழங்கிடவும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிலை நிறுத்தி நிலைய அதிகாரி கவுன்சிலிங் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை கோட்ட தலைவர் யுவராஜ், உதவி பொதுச் செயலாளர் கணேசன், கிளைச் செயலாளர் குமார், மற்றும் ெரயில் நிலைய அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- ஆடி பரணி முன்னிட்டு நடந்தது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ரத்தினகிரி:
ரத்தினகிரியில் ஆடி பரணி முன்னிட்டு பால முருகன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பா லித்தார்.
ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. நேற்று ஆடி பரணி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை சாமி திருவீதி உலா நடைபெற்றது. ஊர்வலத்தை பாலமுருகனடிமை சாமிகள் சிறப்பு பூஜை செய்து துவக்கி வைத்தார். கோவில் மலை அடிவாரத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்ட ஊர்வலம் கீழ்மின்னல் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.
அப்போது பொதுமக்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் வி.சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- ஆற்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகரமன்ற தலைவர்தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாக்கிபோட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
இதில் கல்விக் குழு தலைவர் ராஜலட் சுமிதுரை, மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாவைபழனி விஜயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதலுதவி சிகிச்சை அளித்தும் பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் . அவரது மகள் சந்தியா ( வயது 29 ) . பட்டதாரியான இவர் காஞ் சீபுரத்தில் தங்கி டி.என்.பி. எஸ்.சி. தேர்வுக்காக படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சந்தியா தர்மபுரிக்கு செல்வதற் காக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். நடை மேடைக்கு செல்வதற்காக நடந்து சென்ற போது திடீ ரென அவர் மயங்கி விழுந்துள்ளார்.
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்ட நிலையில் சந்தியா பரி தாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் பொறுத்தப்பட்டது
- அதிகாரிகள் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பழுதடைந்திருந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மாற்றப்பட்டு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுத்திதரிப்பு எந்தரம் நகராட்சி சார்பில் பொறுத்தப்பட்டது.
இதனை நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில் குடிநீர் வழங்க இயக்கிவைக்கப்பட்டது இதில் நகரமன்ற உறுப்பினர்கள் அனு, முனவர்பாஷா, குணாளன் கண்ணன், மகாத்மா காந்த முதியோர்இல்லத்தின் துணை தலைவர் பென்ஸ்பாண்டியன், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் 27 வார்டுகளில் 236 தெருக்களும் 33900 மக்கள் தொகை உள்ளனர். சுத்தமான குடிநீர் வழங்க பொதுநிதியில் இருந்து ரூ.9.30 லட்சம் மதிப்பில் குடிநீரில் தொற்று கிருமி நீக்க குளோரின் சேர்க்கை நவீன எந்திரத்தை தொடங்கும் நிகழ்ச்சி நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி துணைத் தலைவர் பழனி, நகராட்சி ஆணையர் பரந்தாமன், நகராட்சி உறுப்பினர்கள் டி.கோபால், அசோகன், அருண்ஆதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நகராட்சியின் பொதுநிதியில் இருந்து ரூ.9.30 லட்சம் மதிப்பில் குடிநீரில் தொற்று கிருமி நீக்க குளோரின் சேர்க்க நவீன எந்திரத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல் இளநிலை உதவியாளர்கள் எபினேசன் ஜெயராமன் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் அன்பரசு, கணேசன், ஏழுமலை, சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.






