என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கன்னியாகுமரி முதல் ஐதராபாத் வரை பைக் பேரணி
    X

    பைக் பேரணி நடந்த காட்சி.

    ெரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கன்னியாகுமரி முதல் ஐதராபாத் வரை பைக் பேரணி

    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது
    • 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் 75-வது சுதந்திரத்தை முன்னிட்டு ெரயில்வே பாதுகாப்பு படை சார்பாக பல்வேறு போட்டிகளையும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி முதல் ஐதராபாத் வரை இருசக்கர வாகனத்தில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணி கன்னியாகுமரி தொடங்கப்பட்டு சென்னை வழியாக அரக்கோணத்திற்கு வந்தது. அவர்களை அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையாளர் பெரித் மற்றும் அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் உஸ்மான் வரவேற்றனர்.

    பின்னர் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை உதவி ஆணையாளர் பெரித் தொடங்கி வைத்தார்.

    இதில் அரக்கோணத்தை சேர்ந்த ெரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ெரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

    Next Story
    ×