என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரக்கோணம் ெரயில் நிலையம் அருகில் தனியார் திருமண மகாலில் எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் ெரயில் நிலைய அதிகாரிகள் கவுன்சிலிங் கூட்டம் நடந்த காட்சி.
காலியாக உள்ள ெரயில் நிலைய அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
- கவுன்சிலிங் கூட்டத்தில் வலியுறுத்தல்
- பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வரவும் அறிவுறுத்தல்
அரக்கோணம்:
அரக்கோணம் ெரயில் நிலையம் அருகில் தனியார் திருமண மகாலில் எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் ெரயில் நிலைய அதிகாரிகள் கவுன்சிலிங் கூட்டம் நடைபெற்றது.
இக்கவுன்சிலிங் கூட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ் ஜான்சன், தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசுகையில் ெரயில்வே நிர்வாகம் தனியார் மையம் மற்றும் கார்ப்பரேட் ஆக்குவதை குறித்து எதிர்ப்பு தெரிவித்து அதனால் வரும் விளைவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒவ்வொரு ெரயில் நிலையங்களில் உள்ள ெரயில்வே நிலைய அதிகாரி காலி படையிடங்களை உடனடியாக பூர்த்தி செய்வது குறித்தும், ெரயில் நிலைய அதிகாரிகள் பற்றாக்குறையால் பணியில் இருக்கும் ெரயில் நிலைய அதிகாரிகளின் அதிக வேலை பளு காரணமாக ஓய்வில்லாமல் பணியில் இருப்பதால் மன அழுத்தம் ஏற்படுதாகவும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வரக் கோரியும், விருப்ப மாறுதல் கேட்பவர்களுக்கு அனுமதி வழங்கி ஆணை வழங்கிடவும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிலை நிறுத்தி நிலைய அதிகாரி கவுன்சிலிங் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை கோட்ட தலைவர் யுவராஜ், உதவி பொதுச் செயலாளர் கணேசன், கிளைச் செயலாளர் குமார், மற்றும் ெரயில் நிலைய அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






