என் மலர்
ராணிப்பேட்டை
- கலெக்டர் மலர் வளையம் வைத்து அஞ்சலி
- மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த காவனூர் ஊராட்சியில் உள்ள அம்பாரி வித்யாமந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, தாசில்தார் பழனிராஜன், நகராட்சி ஆணையர் லதா, வருவாய், மின்வாரிய அலுவலர்கள் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- இரவு பிரசவ வலி ஏற்பட்டது.
- மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்.
ஆற்காடு:
ஆற்காட்டை அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் . கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி ( வயது 23 ) நிறைமாத கர்ப் பிணியாக இருந்தார்.
அவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மகாலட்சுமியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
காவனூரை அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் செல்லும் போது பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் ராஜ்குமார் பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவரையும் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- அமலாக்க துறையை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அமலாக்க துறையை கண்டித்து சத்யாகிரக அறவழிப்போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார்.நகர தலைவர் வழக்கறிஞர் எஸ்.அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்கில் இருந்து சோனியா காந்தியை விசாரணையில் இருந்து விடுவிக்க வேண்டும்,மத்திய அரசை கண்டித்தும்,மத்திய அமலாக்கதுறையை கண்டித்தும் அமைதி வழி சத்யா கிரக போராட்டம் நடந்தது.
இந்த சத்யாகிரக போராட்டத்தில் மாநில பொது செயலாளர் ராஜ்குமார், மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர் பியாரேஜான், வாலாஜா ஒன்றிய தலைவர் கணேசன், எஸ்சி., எஸ்டி மாவட்டத் தலைவர் நாகேஷ் மாநில பொதுக்குழு உறுப்பினர் விநாயகம் மாவட்ட துணைத் தலைவர் மோகன் மனித உரிமை மாவட்ட தலைவர் ஜானகிராமன் பஞ்சாயத்து ராஜ் சங்க மாவட்டத் தலைவர் குப்புசாமி ராணிப்பேட்டை நிர்வாகிகள் முருகன் மோகனசுப்பிரமணியம் பஞ்சாயத்து ராஜ் சங்க ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலச்சந்தர் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நியாஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- விடிய விடிய பரவலாக பெய்தது
- விவசாயம் பாதிப்பு
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவேரிப்பாக்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென பலத்த மழை பெய்தது.
இரவு முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது இந்நிலையில் தொடர்ந்து காலை முதலே மழை பெய்து வருவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆடி மாதத்தில் பெய்துவரும் கனமழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக மழையால் சிரமபட்டனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள ஒலிம்பியாட் ஜோதியினை ராணிப்பேட்டை முத்து கடை பஸ்நிலையத்திலிருந்து செஸ் ஜோதி ஓட்டத்தினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து ஓட்டத்தில் கலந்துகொண்டார்.
முத்துக்கடையில் இருந்து செஸ் ஜோதியினை கலெக்டர் ஏந்திகொண்டு விசி மோட்டூர் வழியாக வாலாஜா வந்தடைந்தனர். பின்னர் ஆற்காடு நகராட்சி சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், நகரமன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
- மின்தடை நேரத்திலும் அறுவை சிகிச்சை பிரிவு செயல்பட அறிவுறுத்தல்
- நிலுவை பணிகள் குறித்து கேட்டறிந்தனர்
வாலாஜா:
வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, அமைச்சர் ஆர்.காந்தி, தமிழ்நாடு சட்டபேரவை பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் தணிக்கைத் துறை தலைவரால் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வுமான செல்வபெருந்தகை தலைமையிலான குழு உறுப்பினர்கள் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேரடி கள ஆய்வு மேற்கொண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நிலுவை பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அதன்படி இந்த ஆய்வில் வாலாஜா அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவினை ஆய்வு செய்தனர்.அப்போது நீரிழிவு, கர்ப்பப்பை நோய்கள், மலட்டுத்தன்மை, நாள்பட்ட தோல் நோய்கள், மூட்டு வலி, மூலம் ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கருவுற்ற தாய்மார்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு உள்ள நபர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டு மூலிகை பற்றிய பயன்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கப்படுகிறது என சித்த மருத்துவர் பொது கணக்கு குழுவினருக்கு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் நேரடியாக சென்று நோயாளிகளிடம் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலான குழு கேட்டறிந்தனர். அப்போது மருத்துவமனையில் மின்தடையின் போது தானாக ஜெனரேட்டர் இயங்கும் வகையில் இல்லாததை பார்த்து அவசர சிகிச்சை நோயாளிகள் இந்நேரங்களில் பிரச்சனைக்குள்ளாக மாட்டார்களா என கேள்வி எழுப்பினர்.
மின்சாரம் இல்லாத நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் எந்த ஒரு மானிடரும், விளக்குகளும் வேலை செய்யவில்லை. இந்த சூழல் நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாகும். நோயாளிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு மருத்துவத்துறை செயலாளரை அழைத்து விசாரிக்க உள்ளோம்.
எவ்வாறு தடையில்லா சான்று அளித்தார்கள்.இந்த ஏற்பாட்டினை சரியாக செய்திடாத பொதுப்பணித்துறை செயலாளரையும் அழைத்து விசாரிக்க உள்ளோம் என தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார்.
இந்த குறையை உடனடியாக சரி செய்திட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் உத்தரவிட்டார்.இந்த ஆய்வின் போது தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்குகுழு உறுப்பினர்களான காட்டுமன்னார் கோயில் எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன், ஒசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், பாபநாசம் எம்.எல்.ஏ. முனைவர் ஜவாஹிருல்லா, ஆற்காடு எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன், சோளிங்கர் எம்.எல்.ஏ. ஏ.எம். முனிரத்தினம், இணை செயலாளர் தேன்மொழி, துணை செயலாளர் ரேவதி உள்பட பலருடன் இருந்தனர்.
- மரக்கன்றுகள் நடப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக 288 ஊராட்சிகளில் செஸ் போர்டில் உள்ள 64 கட்டங்கள் குறித்து அனைத்து ஊராட்சிகளிலும் 64 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் தொடங்கிவைத்து மரக்கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
- சென்னை அரக்கோணம் புறநகர் மின்சார ரெயில்களும் காலதாமதமாக வந்து சேர்ந்தது.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் சென்னை-மும்பை செல்லும் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் பெங்களூரில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 25 நிமிடம் காலதாமதமாக சென்றது.
மேலும் சென்னை அரக்கோணம் புறநகர் மின்சார ரெயில்களும் காலதாமதமாக வந்து சேர்ந்தது.
இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாயினர் எனினும் தொடர் மழையால் வாட்டி வதைத்த வெயில்வெப்பம் தணிந்து குளிர்ச்சியானது.
இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரக்கோணத்தில் 54 மி.மி. மழை பெய்துள்ளது.
- அடையாளம் தெரியவில்லை
- ரெயில்வே போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட் பட்ட திருத்தணி அடுத்த பொன்பாடி ரெயில் நிலைய பகுதியில், திருப்பதி - அரக் கோணம் மார்கத்தில் உள்ள தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நேற்று காலை பிரியாணி வாங்க வந்துள்ளார் .
அப்போது அந்த கடையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது . அந்த வேளையில் ராஜேஷின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணி பர்சை அடையாளம் தெரியாத நபர் எடுத்துக் கொண்டு ஓடி உள்ளார் .
இதனை கண்ட ராஜேஷ் கூச்சலிட்டுள்ளார். உடனே அந்த நபரை பொதுமக்கள் துரத்திச் சென்று பிடித்து ஆற்காடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத் துள்ளனர் .
போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாய் சிவா ( வயது 30 ) என்பது தெரிய வந்தது . அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
- 388 மது பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த திமிரி பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகதிமிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று காலைபோலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திமிரி பாவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த குண்டு என்கிற சுப்பிரமணி ( வயது 53 ) என்பவர் டாஸ்மாக் கடையில் வாங்கிய 388 மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது .
மேலும் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிகிறது . இது குறித்து திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு
- போலீசார் கடும் எச்சரிக்கை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அவளுர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஓச்சேரி, மேலபுலம், பெரும்புலிப் பாக்கம், மாமண்டூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பங்க் கடைகளில் நேற்று சப் இன்ஸ்பெக்டர், சுரேஷ் குமார், சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் தலைமையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப் படுகின்றதா என்று சோதனை செய்தனர்.
அப்போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்க படும் என்று எச்சரிக்கை செய்தனர்.






