என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை"

    • 388 மது பாட்டில்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த திமிரி பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகதிமிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நேற்று காலைபோலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திமிரி பாவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த குண்டு என்கிற சுப்பிரமணி ( வயது 53 ) என்பவர் டாஸ்மாக் கடையில் வாங்கிய 388 மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது .

    மேலும் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிகிறது . இது குறித்து திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×