search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
    X

    கூட்டம் நடந்த காட்சி.

    ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

    • ஒன்றியகுழு கூட்டத்தில் தீர்மானம்
    • பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தலைமையில், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் நம்முடைய ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்க ப்பட்டது. ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேவைக்கேற்ப சிமெண்ட் சாலைகள் அமைத்தல், குடிநீர் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை சுமார் 1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.

    பொது மக்களின் கோரிக்கைகளை ஏற்று கிராமப்புறங்களில் புதியதாக பகுதிநேர ரேசன் கடைகளை அமைக்க கலெக்டரிடம் கோருவதெனவும், கட்டிட வசதி இல்லாமல் வாடகை கட்டிடங்களில் இயங்கும் சேரன் கட்டிடங்களை கட்டித்தருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், பொறியாளர் ராஜேஷ், வேளாண்மை துறை, மருத்துவதுறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×