என் மலர்
நீங்கள் தேடியது "172 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது."
- நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிக்கான குறை தீர்வு முகாம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளி களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சான்று வழங்கினர். பின்னர் 172 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
57 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பதிவு, 72 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டது. 158 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.12.5 ஆயிரம் மதிப்பில் செயலிகளுடன் கூடிய திறன் பேசியும், 2 பேருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் நடை பயிற்சி உபகரணம், ரூ.50ஆயிரம் மதிப்பில் செயற்கை கால் ஒருவருக்கும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.மேலும் ஒருவருக்கு ரூ.5ஆயிரம் மதிப்பில் காது காதொலி கருவி வழங்கினார்.
முகாமில் பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்களுக்கு கலெக்டர் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனம் மூலமாக மதிய உணவு வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், மாற்றுத்திறனாளிகள் நல சங்க அலுவலக பணியாளர்கள், மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொண்டனர்.






