என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • இறந்தவர் யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூர்-திருத்தணி ரெயில் நிலையத்திற்கு இடையே கீழாந்தூர் கிராமம் பகுதியில் திருப் பதி ரெயில் மார்க்கத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ் ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத் துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    ஆற்காடு:

    ஆற்காடு , கத்தியவாடி , மாம்பாக்கம் ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளது .

    எனவே நாளை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை ஆற்காடு நகரம் முழுவதும் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு , வேப்பூர் , விஷாரம் , நந்தியாலம் , தாழனூர் , ராமநாதபுரம் , கூராம்பாடி , உப்புப்பேட்டை , கிருஷ்ணாவரம் , லப்பப்பேட்டை , முப்பது வெட்டி , தாஜ்புரா , தக்கான்கு ளம் , களர் , கத்தியவாடி , கீழ்குப் பம் , ஆயிலம் , அருங்குன்றம் , ஆயிலம்புதூர் , ராமாபுரம் , மாம்பாக்கம் , குப்பிடிசாத்தம் , மருதம் , இருங்கூர் , பென்னகர் , வாழப்பந்தல் , வேம்பி , அத்தியானம் , ஆரூர் , வடக்குமேடு , தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என ஆற் காடு மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித் துள்ளார்.

    இதேபோல் ராணிப் பேட்டைதுணை மின் நிலை யத்திலும் நாளை அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது . இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப் பேட்டை நகரம் , முத்துக் கடை , ஆட்டோ நகர் , வி.சி. மோட்டூர். ஜெயராம் நகர் , பழைய ஆற்காடு சாலை , காந்தி நகர் , மேல் புதுப் பேட்டை , பிஞ்சி , அல்லிகுளம் , சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற் பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 27 - ந் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க அறிவுரை
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் தேவையை பொறுத்து மண்டல, மாவட்ட, வட்டார அளவில் பண்ணைசார் தொழில்கள், குழுத் தொழில்கள் மற்றும் தனிநபர் தொழில்களை மேம்படுத்திடும் வகையில் ஒப்பந்த முறையில் பணிபுரிந்திட தொழில்நுட்ப ஆலோசகர்கள் , தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பணிக்கு தேவையான கல்வித் தகுதி , பணி அனுபவம் , நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்கள் அனைத்தும் https : // www.tnrtp.org என்கிற இணைய தளத்தில் உள்ளது . இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதள முகவரியில் வருகிற 27 - ந் தேதி ( செவ்வாய்கிழமை ) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார் .

    • ஒரே இடத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு
    • கால்பந்து ரசிகர்கள் ஆரவாரம்

    அரக்கோணம்:

    உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கத்தாரில் அர்ஜென்டினா பிரான்ஸ் கிடையே மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.

    இந்தப் போட்டியை காண அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் கால்பந்து ரசிகர்களுக்காக பெரிய திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்த ஒளிபரப்பின் போது இரு அணிகளும் சம பலமுடன் விளையாடி 3.3 என்ற கோள் கணக்கில் ஆட்டம் நிறைவுற்ற நிலையில் கூடுதல் நேரத்திலும் இரு அணியினரும் கோல் அடித்து சமநிலை அடைந்தனர். அதனை தொடர்ந்து பெனால்டி ஷூட்அவுட் முறையில் அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடித்து வெற்றி பெற்றனர்.

    அர்ஜென்டினாவின் வெற்றியை அரக்கோணம் கால்பந்து ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கால்பந்து போட்டி நேரடி ஒளிபரப்பை பெரிய திரையில் கண்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர்.

    • அரக்கோணம் நகர தி.மு.க. சார்பில் நடந்தது
    • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் சுவால்பேட்டை பகுதி பிள்ளையார் கோயில் அருகே பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம நகர செயலாளர் வி.எல்.ஜோதி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் பங்கேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர். வினோத் காந்தி, தலைமை கழக பேச்சாளர் சேப்பாக்கம் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு கண்ணையன், முன்னாள் மாவட்ட துணைத் செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், சௌந்தர், வடிவேலு பசுபதி, பெருமாள், நாகராஜன், ஜனார்த்தனன், என் ஆர் சீனிவாசன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சிட்டிபாபு, கிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இளைஞர் திறன் திருவிழா நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    நெமிலியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் - தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க, திட்ட இயக்குனர் மு.நானிலதாசன் தலைமை தாங்கினார். இதில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

    வேலைவாய்ப்பு முகாமில் நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களைச் சார்ந்த கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

    இந்நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் ச.தீனதயாளன், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, .சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், தனியார் கம்பெனிகளின் நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காப்பாற்ற முயன்ற மகளும் கருகினார்
    • விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில் பரிதாபம்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சி.ஆர்.பி.எப் வீரர் ஏழுமலை.ஆவடியில் பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி வனஜா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

    ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் ஏழுமலை 15 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.வீட்டில் தனது மூத்த மகளான சண்முகப்பிரியா மட்டும் இருந்த நிலையில், ஏழுமலை அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.அப்போது திடீரென மதுபோதையில், ஏழுமலை தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீயை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதனைக் கண்ட அவரது மகள் சண்முகப்பிரியா உடனடியாக தனது தந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார்.அப்போது இருவரும் தீயில் சிக்கிய நிலையில், அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்து தீயில் எரிந்து கொண்டிருந்த தந்தை ஏழுமலை மற்றும் மகள் சண்முகப்பிரியாவை மீட்டனர்.தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் உதவியோடு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஏழுமலை உடல் முழுவதும் கருகிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சண்முகப்பிரியா தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மதுபோதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே சித்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 45), விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நடராஜுக்கு வீட்டின் அருகே விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கிணறு ஒன்றும் அருகே உள்ளது.

    நடராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நடராஜ் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது தனது விவசாய நிலத்தின் அருகே சென்ற போது கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கிணற்றில் விழுந்த நட்ராஜை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெமிலி ஊராட்சி ஒன்றியம் சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரத்திற்கான பேரணி, நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.

    இப்பேரணியை நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார கூட்டத்தில் பேசிய அவர், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு, பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய துணை பெருந்தலைவர்ச.தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வேதமுத்து, சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள், மாணவிகள் என திரளானோர் விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.

    • மாண்டஸ் புயலில் சேதமடைந்தது
    • அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்

    அரக்கோணம்:

    மாண்டஸ் புயலால் அரக் கோணம் சுற்றியுள்ள பகுதி களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

    இதில் பல பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்து விழும் -நிலையிலும், மின் வயர்கள் அறுந்து தரையில் விழுந்து இருப்பதாகவும் கூறப்படு கிறது.

    இந்த நிலையில் அரக்கோணம் அடுத்த காவனூர் நர சிங்கபுரத்தை சேர்ந்த முனியம்மாள், கஸ்தூரி, பொன்னாம்மாள் மற்றும் ஜானகி ஆகியோரின் 5 பசு மாடுகள் நேற்று முன்தினம் செம்மந்தாங்கல் ஏரி பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின் வயர்களை மிதித்ததில் 5 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

    இதுகுறித்து மின் வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு மின் நிறுத்தம் செய்து 24 மணி நேரமாகியும் அறுந்த மின் வயர்களையும் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்களையும் சீரமைக்க வில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவ்வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார், வருவாய் துறை மற்றும் மின்வாரிய அதி காரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சரி செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    மேலும் 5 பசுமாடுகள் பலியான சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு வருடமாக கண்டுகொள்ளாத அதிகாரிகள்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் மற்றும் திருப்பாற்கடல் ஊராட்சியில் பாலாற்றில் ஆய்துளை கிணறுகள் அமைத்து பைப் லைன் வழியாக ராமாபுரம், சுமைதாங்கி, காவேரிப்பாக்கம் போன்ற ஊர்களுக்கு தண்ணீர் செல்கிறது.

    இந்நிலையில் பாலாற்றில் இருந்து அத்திப்பட்டு செல்லும் வழியில் செல்லும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.

    ஒரு வருடத்திற்கு மேலாகியும் அதிகாரிகள் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் குடிநீர் தொடர்ந்து வீணாகிறது.

    மேலும் சிறு பாலத்தில் தண்ணீர் தேங்கி பாலத்தின் உறுதி தன்மையை இழந்து சேதம் அடையும் அபாயம் உள்ளது ஒரு வருடத்திற்கு மேலாக உடைந்த வீணாகும் குடிநீரை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா?.

    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
    • மாணவிகள் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கரில் மின்சார துறை சார்பில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மின்சார உதவி செய்ய பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார். சோளிங்கர் நகராட்சி ஆணையர் பரந்தாமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் இதில் அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிக்கன வார குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பின்னர் மின் சிக்கனம் குறித்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    மின்சிக்கன ஊர்வலத்தில் நகராட்சி துணைத் தலைவர் பழனி, உறுப்பினர்கள் அசோகன் அன்பரசு உள்பட நகராட்சி ஊழியர்களும் மின்சார ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    ×