என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பொன்னை ரோட்டில் சிப் காட் நெல்லிக்குப்பம் பகு தியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 59), விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி (48). அங்குள்ள தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

    இவர்களுக்கு ராஜேஷ் (33), தினேஷ் (24) என 2 மகன்கள் உள்ளனர். தினேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் வீட்டிலேயே வைத்து பராமரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி தனலட்சுமி, ராஜேஷ் வேலைக்கும், முனுசாமி வயலுக்கும் சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த முனுசாமி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் நகைகளை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.4.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து முனுசாமி சிப் காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 டன் பறிமுதல்
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் போலீசார் ரேசன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ராணிப்பேட்டை டவுன் போலீசார் அம்மூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அம்மூர் ரோடு தனியார் பள்ளி அருகில் தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேசன் அரிசி மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    அப்போது போலீசார் அந்த நபரை பிடிக்க முயன்றனர். போலீசார் வருவதை கண்ட அந்த நபர் தப்பி போது தப்பி ஓட முயன்றார். பின்னர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆற்காடு தோப்புக்கானா சடாய் தெருவை சேர்ந்த ராகுல் (வயது 20) என தெரியவந்தது.

    மேலும் ராகுல் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்று வந்தது தெரிந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப் பட்டது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராகுலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • நிலத்தகராறில் முன்விரோதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    கலவை அடுத்த கன்னிகாபுரம் கிரா மத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40). இவருக்கும் பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணா துரை (55). என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு அண்ணாதுரை நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார். அப்போது, அவருக் கும், அண்ணாதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது லோகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணாதுரையின் கை மற்றும் கால்களில் வெட்டி உள்ளார்.

    இதில் காயம் அடைந்த அண்ணா துரையை மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வாழை ப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து தலை மறைவாக இருந்த லோகநாதனை தேடி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மா ம்பாக்கம் பஸ் நிலையம் அருகே நின்றிருந்த லோகநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொருள்களின் தரம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்
    • தண்ணீர் இணைப்பு கொடுக்க உத்தரவிட்டார்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    வாலாஜா நகராட்சி கச்சால் நாயக்கர் தெருவில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி நியாய விலை கடையில் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் அரிசி இருப்பு ஆகியவற்றை பார்வையிட்டு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

    அப்பொழுது பொருள்கள் வழங்கப்பட்ட விவரங்கள், தற்பொழுது இருப்பு உள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவைகளை எடை போட்டு ஆய்வு செய்தார்.பொருட்கள் இருப்பு எடை அளவை ஆகியவற்றை கைபேசி செயலின் மூலம் பதிவேற்றம் செய்தார்.

    இதனைத் தொடர்ந்து வாலாஜா ஊராட்சி ஒன்றியம் பூண்டி ஊராட்சியில் உள்ள நியாய விலை கடைகளிலும் அரிசி, பருப்பு ஆகியவற்றின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இருப்பில் உள்ள பொருள்களில் எடை அளவை ஆய்வு செய்து பொருட்களின் எடை அளவு சரியாக இருக்கின்றது என தெரிவித்தார்.மேலும் பொதுமக்களிடம் பொருள்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    இதனைத் தொடர்ந்து பூண்டி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திடீரென ஆய்வு செய்து மையத்தில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற இருந்ததை பார்வையிட்டு முறையாக குழந்தைகளுக்கு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் தண்ணீர் வசதிகள் இல்லை, இதனை உடனடியாக சரி செய்து தண்ணீர் இணைப்பு கொடுக்க உத்தரவிட்டார்.

    குழந்தைகளுக்கு சுகாதாரமான சூழ்நிலையை மையத்தில் அமைத்து கொடுக்க வேண்டும் என அங்கன்வாடி மைய ஊழியருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், வட்டாட்சியர் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • கலெக்டர் உத்தரவு
    • ஜெயிலில் அடைப்பு

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த வேலூர் பேட்டை அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 23).

    இவர் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக, அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும், இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் விக்கி என்கிற விக்னேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

    • அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு

    ஆற்காடு நகர அ.தி.மு.க. சார்பில் ஆற்காடு நகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நகர செயலாளர் ஜிம்.சங்கர் தலைமையில் தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, போதை பொருட்கள் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க. அரசை கண்டித்து பேசினார்.இதில்

    கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பைக்கில் வந்தவரை மறித்து கொடூரம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த வீராணத்தூரை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 23). இவர், சோளிங்கர் பஜார் பிள்ளையார் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது கொடைக்கல் மோட்டூரை சேர்ந்த வெற்றிவேல் (27) என்பவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார் .

    பின்னர் அவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹரிஹரனை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகானந்தம், சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் புகாரால் பரபரப்பு
    • மின்மோட்டார் பொருத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கோனேரி தெரு, பரசுராமன் தெரு சந்திப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார் பொருத்தி குடிநீர் வழங்கப்பட்டது.

    கடந்த பல வருடங்களாக குடிநீர் தொட்டி மற்றும் நீர்மூழ்கி மோட்டார் பழுது ஏற்பட்டது. அதை சரிசெய்ய எடுத்துச் சென்றனர்.

    அதன்பிறகு இதுவரை மோட்டார் பொருத்தப்படவில்லை. ஆனால் இல்லாத மோட்டாருக்கு பல ஆயிரக்கணக்கில் நகராட்சி சார்பில் மின் கட்டணம் செலுத்தப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

    எனவே உடனடியாக பொதுமக்கள் பயன்படும் வகையில் மீண்டும் மோட்டார் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமையில் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

    இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் அணி சார்பில் பொதுமக்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் பழச்செடிகள் மற்றும் விதைகளை மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ர மணன், ஜி.கே.உலக பள்ளி இயக்குனர் சந்தோஷ் காந்தி, மாவட்ட துணை செயலாளர் அமுதா, நகர செயலாளர் பூங்காவனம், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, வாலாஜா நகர செயலாளர் தில்லை, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், மாவட்ட விவசாய அணி வெங்கடேசன், திமுக நிர்வாகிகள் வேதா சீனிவாசன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து முத்துக்க டையில் நகர திமுக சார்பில் அல ங்கரிக்கப்பட்ட அன்பழகன் உருவபடத்திற்கு வினோத் காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

    • கலெக்டர் உத்தரவு
    • ஜெயிலில் அடைப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட் டம் சிப்காட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் வாலாஜா தாலுகாவானா பாடிகிராமத்தைச்சேர்ந்த ரமேஷ் (வயது 44) என்பவரை ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    அதே போல், வாலாஜா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலையில் வாலாஜா தாலுகா கீழ்விஷாரம் ராசாத்துபுரம் பகுதியைச் சேர்ந்த குமரன்(29) என்பவரை ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    அதேபோல், சோளிங் கர் அருகே கொலை வழக் கில் சோளிங்கர் தாலுகா ஐப்பேடு கிராமத்தைச்

    சேர்ந்த அசோக்பாண் டியன்(24), கோபி(24), தாமோதரன்(24) ஆகி யோரை சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடு பட்டு வரும் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்ய எஸ்பி தீபா சத்யன். கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு பரிந்துரைத்தார் .

    அதன்பேரில் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணத்தை போலீசார் வழங்கினர்.

    • நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.

    கலெக் டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக் கள், மாற்றுத்திறனாளிகளி டம் இருந்து நேரடியாக மனுக் களை பெற்றார்.

    கூட்டத்தில் நிலப்பட்டா, பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி, மின் சாரத் துறை சார்பான குறை கள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் அளித்த னர். மொத்தம் 350 மனுக்கள் பெறப்பட்டது.

    அந்த மனுக்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவ டிக்கை எடுக்கவும், மனு நிரா கரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்க ளுக்கு உடனடியாக தெரிவித் திட உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மைத் துறை நல அலுவ லர் முரளி, துணை கலெக்டர் தாரகேஸ்வரி, கலால் உதவி ஆணையர் சத்திய பிரசாத். மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 3 பேர் மீட்பு
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நிக்கல்சன் ரெட்டி, தாக்கா ரெட்டி. இவர்கள் சித்தூரில் இருந்து புதுச் சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு காரில் சென்றுள்ளனர்.

    நரசிம்மலு என்பவர் காரை ஓட்டிசென்றுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பின்னர் புதுச்சேரியில் இருந்து சித்தூருக்கு புறப்பட்டனர்.

    நேற்று மதியம் ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பாடி ஜி.எம்.நகர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது கார் நிலை தடுமாறி நிலத்தில் இருந்த 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தலைகீழாக கவிழ்ந்து உள்ளது. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் காரில் இருந்த 3 பேரையும் மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கலவை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றிலிருந்து காரை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×