என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது
    X

    ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது

    • 2 டன் பறிமுதல்
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் போலீசார் ரேசன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ராணிப்பேட்டை டவுன் போலீசார் அம்மூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அம்மூர் ரோடு தனியார் பள்ளி அருகில் தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேசன் அரிசி மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    அப்போது போலீசார் அந்த நபரை பிடிக்க முயன்றனர். போலீசார் வருவதை கண்ட அந்த நபர் தப்பி போது தப்பி ஓட முயன்றார். பின்னர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆற்காடு தோப்புக்கானா சடாய் தெருவை சேர்ந்த ராகுல் (வயது 20) என தெரியவந்தது.

    மேலும் ராகுல் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்று வந்தது தெரிந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப் பட்டது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராகுலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×