என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The car fell into the well"

    • 3 பேர் மீட்பு
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நிக்கல்சன் ரெட்டி, தாக்கா ரெட்டி. இவர்கள் சித்தூரில் இருந்து புதுச் சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு காரில் சென்றுள்ளனர்.

    நரசிம்மலு என்பவர் காரை ஓட்டிசென்றுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பின்னர் புதுச்சேரியில் இருந்து சித்தூருக்கு புறப்பட்டனர்.

    நேற்று மதியம் ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பாடி ஜி.எம்.நகர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது கார் நிலை தடுமாறி நிலத்தில் இருந்த 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தலைகீழாக கவிழ்ந்து உள்ளது. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் காரில் இருந்த 3 பேரையும் மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கலவை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றிலிருந்து காரை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×