என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள்
    • குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வலியுறுத்தல்

    ராணிபேட்டை:

    தமிழர் திருநாளான பொங் கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தையநாளை நாம் போகி பண்டிகையாக கொண் டாடுகிறோம். அந்த நாளில் பழைய பொருட்களை எரிப்பது என்பது பழையன கழிதல் என்ற வழக்கிற்கான அடை யாளமாகும். கிழிந்த பாய்கள், துணிகள், தேய்ந்த துடைப் பான்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.

    பெரும்பாலும் கிராமங் களில் கடைபிடிக்கப்படும் இந்த பழக்கம் சுற்றுச்சூழ லுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தாத ஒன்றாகும். ஆனால் தற்போது போகி தினத்தன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நக ரங்களில் ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட் களை எரிக்கும்போது நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு மக்க ளுக்கு சுவாச நோய்கள், இரு மல், நுரையீரல், கண் மற்றும் மூக்கு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்ப டுகிறது. புகையினால் காற்று மாசுபட்டு நாம் வசிக்கும் நக ரம் கருப்பு நகரமாக மாறு கிறது. நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சாலை போக் குவரத்து தடை ஏற்படுகிறது. புகையில்லா போகிப்பண்டிகை

    இதுபோன்ற செயல்கள் மூலம் காற்று மாசுபடுகிறது. பழைய மரம், வறட்டி தவிர மற்றவற்றை எரிப்பதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும்.

    போகிப்பண்டிகையன்று குப்பைகளை திடக்கழிவுடன் சேர்த்து அப்புறப்படுத்தி பொங்கல் திருநாளை மகிழ்ச் சியுடன் காற்று மாசு இல்லா மல் கொண்டாட அனைவ ரும் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    புகையில்லா போகிப்பண் டிகை கொண்டாட பொது மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள் ளது. அதன்படி புகையில்லா மல் போகிப்பண்டிகை கொண்டாடவும், தங்களுக்கு தேவையில்லாத பொருட்களை ஆங்காங்கே தீயிலிட்டு எரிக்காமல் வீடு, வீடாக குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கவும், அதன் மூல மாக நமது நகரை காற்று மாசு படுவதில் இருந்து பாதுகாத் திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார் 

    • மாணவிகள் முகாம் குறித்து கிராம மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது

    நெமிலி:

    நெமிலி ஒன்றியம், சிறுணமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பூதேரி பகுதியில், நெமிலி கால்நடை மருந்தகம் மூலம் கா நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடை பெற்றது. முகாமில் 200 மாடுகளுக்கு தோல் கழலை நோயத் தடுப்பூசியும், 61 கால்நடைகளுக்கு ஆவின் தாது உப்பு கலவை யும், 25 மாடுகளுக்கு சினை பரிசோதனையும், 10 மாடுகளுக்கு சினை ஊசியும் போடப்பட்டது. கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது.

    முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அருணாச்சலம் தொடங்கி வைத்தார். உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னினை வகித்தனர்.

    நெமிலி கால்நடை உதவி மருத்துவர் சுப்பிரமண யன் தலைமையில், கால்நடை ஆய்வாளர் சிவக்குமார், கா நடை பராமரிப்பு உதவியாளர் குமார், செயற்கை முறை கருவூட்டாளர் சுதாகர் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் முகாம் குறித்து கிராம மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்டுத்தினர். முடிவில் ஊராட்சி செயலாளர் நன்றி கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    • வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நடக்கிறது

    ராணிபேட்டை:

    அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக நடத்தப்படுகிறது.

    இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடம் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் குறித்த விவரங்களை அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    வருகிற 19-ந் தேதி போளூர் தொகுதி பேசுபவர்கள் முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து மன்ற உலக எம்ஜிஆர் துணை செயலாளர் முருகுமணி கடியாபட்டி கிருஷ்ணன்.

    அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வாலாஜாபாத் கணேசன், சோழவேந்தன், புதூர் மணி, ஜோலார்பேட்டை மாவட்ட செயலாளர் கே சி வீரமணி, அதிமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல், ஆரணி பி.ஏ.டி.சி. கே.அன்பழகன் காட்பாடி, தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளர் கோவை சத்யன், இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ஆனந்த் மற்றும் பரசுராமன்.

    அரக்கோணம், அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் கோபிநாதன், நடிகை ஜெயதேவி. செய்யார் தொகுதி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராயபுரம் மனோ, சினிமா நடிகர் அனுமோகன் மற்றும் அதிரடி பாலன்.

    20-ந் தேதி திருவண்ணாமலை, தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளர் கோவை சத்யன், திரைப்பட நடிகர் அனுமோகன்.

    வந்தவாசி முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜவஹர் அலி, கடியாபட்டி கிருஷ்ணன்.

    வேலூர் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சங்கரதாஸ், மகளிர் அணி துணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கலைச்செல்வி, டி.பி.குலாப்ஜான்.

    திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் டாக்டர் சுனில், பேராவூரணி திலீபன். ஜனனி சதீஷ்குமார், ஆற்காடு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனி பி. சதீஷ்குமார் மற்றும் சோழ வேந்தன்.

    21-ந்தேதி குடியாத்தம் செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, தர்மராஜன், ஆமூர். தனசேகரன்.

    கீழ்பென்னாத்தூர் தொகுதி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கலை புனிதன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பஞ்செட்டி கே. நடராஜன், டாக்டர் வழக்கறிஞர் சிவசங்கரன், கலசப்பாக்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சீனிவாசன், தஞ்சை சங்கர், பிராட்வே எல். குமார்.

    வாணியம்பாடி, ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பிரபு, தேவாலா மா.ரவி, வாலாஜா பி. கிருஷ்ணன்.

    சோளிங்கர் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொன். ராஜா, செங்கை கோவிந்தராஜன், அதிரடி பாலன்.

    22 -ந் தேதி ஆரணி தொகுதி அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன், ஆர். கே நகர் மணிமாறன்.

    கே வி குப்பம் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், நடிகை பபிதா மற்றும் அதிரடி அரங்கநாதன்.

    செங்கம் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் சின்னய்யா, திரைப்பட நடிகை டி.கே.கலா மற்றும் பன்னீர்செல்வம்.

    ராணிப்பேட்டை அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சசிரேகா, வண்ணை ஆர். சேகர்

    ஆம்பூர், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் லட்சுமி நாராயணன், சிவன் ஸ்ரீனிவாசன், பிராட்வே எல். குமார் ஆகியோர் பேசுகின்றனர்.

    மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அணி மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ணைந்து எ.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும்.அதன் விவரங்களை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கு உணவு பரிமாறி தரையில் அமர்ந்து சாப்பிட்டார்
    • பொங்கல் பண்டிகையையொட்டி மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது

    ஆற்காடு:

    ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது விடுதியில் உள்ள சமையல் கூடத்தில் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாணவர்களுக்கு மதிய உணவாக காய்கறி சாதம் வழங்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் வடை தயார் செய்யப்பட்டிருந்தது. அதனை கலெக்டர், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்டார்.

    ஆய்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முரளி, தாசில்தார் சுரேஷ், விடுதி காப்பாளர் அன்பரசு மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

    • நாளை மாங்கல்ய பூஜை நடைபெறுகிறது
    • பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஒரு லட்சம் காசுகள் கொண்டு ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு சிறப்பு யாகம், பூஜை, அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது.

    ஜனவரி 7ம் தேதி முதல் வருகிற 18-ம்தேதி முடிய 12 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாகம், 3 வது நாளான நேற்று சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் நடைபெற்றது.

    ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகத்துடன் மன்ய சூக்த பாசுபத ருத்ர ஹோமமும், பூஜையும் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ தன்வந்திரி, மஹா சுதர்சனம், ஸ்ரீ மகாலஷ்மி ஹோமங்களும் நடைபெற்றன.

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர். பிஜாய் சோங்கர் சாஸ்திரி நேற்று தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்தார்.அவருக்கு தன்வந்திரி பீடம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

    பின்னர் அவர் ஸ்ரீ லஷ்மி குபேர யாகத்தில் கலந்து கொண்டு தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்தார். நாளை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மாங்கல்ய பூஜை நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்கும் பெண்களுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட மாங்கல்ய சரடு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் அரக்கோணம் அடுத்த சாலை கிராமம் தனியார் திருமண மண்டபத்தில் அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது. சோளிங்கர் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி முன்னிலையில் வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் க.சரவணன், மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அரக்கோணம் மற்றும் சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் வேலை செய்யும் மக்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், மணி, ஜெயசங்கர், கிருஷ்ணன், குணசேகரன், மாதவன், முத்து, மாவட்ட துணைச் செயலாளர் ராமசாமி, சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், மாணவர் சங்க செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட பொது குழு உறுப்பினர் கோ.ஏழுமலை மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளரும் கைணூர் ஊராட்சி மன்ற தலைவருமான கோ.உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

    • விவசாயிகள் ஒற்றை நெல் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
    • நீரினை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கரிவேடு ஊராட்சியில் உலக வங்கி நிதியின் வாயி லாக வேகவதி உபவடி நில பகுதியில் நீர்வளத்துறையின் முலம் செயல்படுத்தப்பட்டு வரும் கரிவேடு ஏரி, தாமல் கால்வாய், கட்டுமானங்கள், தாமல் கசக்கால்வாய் புனரைமைப்பு பணிகளை உலக வங்கியின் நீர்வள வளர்ச்சி நிபுணர் யூப் நேற்று ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது ஏரிகள் மற்றும் கால்வாய்களில் நடைபெறும் பணிகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    பல ஆண்டுகளுக்கு பிறகு ஏரிகள் சிறப்பாக தூர்வாரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் ஏரிகளின் கீழ் செல்லும் பாசன கால்வாய்களை அதிகாரிகள் உடனிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டுத் தரவும் கோரிக்கை வைத்தனர்.

    ஏரிகளில் புதிதாக செயல்பாட்டிற்கு வந்துள்ள நீர் பாசன சங்கங்கள் வாயிலாக நிதி ஆதாரம் திரட்டி பாசன கால்வாய்களை சீரமைத்து கொள்ளவும், பணிகள் முடிக்கப்பட்டவுடன் ஏரிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், ஒற்றை பயிர் சாகுபடி போன்ற பயிர்கள் செய்து நீரினை சிக்கனமாக பயன்படுத்தவும் விவசாய ஏரி நீர்பாசன சங்கங்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது மேல் பாலாறு வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், கோட்ட செயற்பொறியாளர் ராஜேஷ், உட்கோட்ட உதவி செயற் பொறியாளர் பிரபாகர் மற்றும் காவேரிப்பாக்கம் பாசன பிரிவு உதவி பொறியாளர் மெய்யழகன், பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செபஸ்டின் ரகோத்தமன் மற்றும் வே ளாண்மை தோட்டக்கலை உதவி இயக்குனர் சண்முகம் மற்றும் சார்பு துறை அலுவ லர்கள் விவசா யிகள்ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பல்வேறு நல திட்ட பணிகள் குறித்து ஆலோசனை
    • 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான ஆர்.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் ரவிக்குமார் முன்னிலையில் வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணையன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் பசுபதி கலந்துகொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பல்வேறு நல திட்ட பணிகள் குறித்து பேசினார்கள்.

    தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜன், அரக்கோணம் ஒன்றிய குழு துணைத் தலைவர் புருஷோத்தமன் மற்றும் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன், பூட்டுதாக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் ஆகிய இருவரும் பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பினர்.

    சொரையூர்கூட் டுரோட்டில் இரவு 11.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாழப்பந்தல் கிராமத்தை சேர்ந்த விமல் ராஜ் (வயது 25) என்பவர் மணிகண்டன், மகேசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளார்.

    இது குறித்து மணிகண்டன், மகேஷ் ஆகிய இருவரும் வாழப்பந்தல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விமல் ராஜை நேற்று கைது செய்தனர்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
    • அரக்கோணம் செயற்பொறியாளர் தகவல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மின் கோட்டம் சாலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தண்டலம், மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான் பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், பாராஞ்சி, வேடல், அல்ட்ரா டெக் சிமெண்ட், குருவராஜப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதே போன்று புதன்கிழமை காலை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இச்சிபுத்தூர் துணை நிலையத்திற்கு உட்பட்ட இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப்., தணிகை போளூர், வாணியம் பேட்டை, வடமாம்பாக்கம், உளியம் பாக்கம், வளர்புரம், தண்டலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று அரக்கோணம் மின்கோட்ட செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார். 

    • வேலைக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 42). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் நேற்று வீட்டிலிருந்து மொபட்டில் வேலைக்கு புறப்பட்டார். பெல் பைபாஸ் மலைமேடு ரெயில்வே பாலம் அருகில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மொப்ட் மீது மோதி யது.

    இதில் படுகாயம் அடைந்த ரஜினியை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர்.

    ஆனால் வழியிலேயே ரஜினி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.45 லட்சம் ரேசன் அட்டை தாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 376 குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் உள்ள கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சரவணன் வரவேற்றார்.

    ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், ஒன்றியக்குழு தலைவர் வெங்கடரமணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    ஒரு கிலோ அரிசி, கரும்பு, வேட்டி, சேலை, ரூ.1000 பணம் ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பேசியதாவது:-

    இந்த பொங்கல் தொகுப்பு இன்று முதல் 12-ந்தேதி வரையில் ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு அனைத்து ரேசன் கடைகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் சர்க்கரை, ரொக்கம் ரூ.1000 வழங்க ஏதுவாக முழுமையாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.பொங்கல் பரிசு தொகுப்பு 9-ந்தேதி முதல் 12-ந் தேதி வரையில் வாங்க தவறியவர்கள் வரும் 13-ந்தேதி ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 3,45,075 குடும்பங்கள் இதனால் பயன் பெறுகின்றனர்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் ரமேஷ்கர்ணா, நகரமன்ற உறுப்பினர் வினோத், வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, துணை பதிவாளர் சந்திரன், தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கன்னியப்பன், நகர செயலாளர் பூங்காவனன் உள்பட அரசு அலுவலர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், திமுக பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொது விநியோக துணை பதிவாளர் சிவமணி நன்றி கூறினார்.

    ×