அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம்

பல்வேறு நல திட்ட பணிகள் குறித்து ஆலோசனை 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம்
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான ஆர்.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் ரவிக்குமார் முன்னிலையில் வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணையன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் பசுபதி கலந்துகொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பல்வேறு நல திட்ட பணிகள் குறித்து பேசினார்கள்.

தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜன், அரக்கோணம் ஒன்றிய குழு துணைத் தலைவர் புருஷோத்தமன் மற்றும் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com