என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ரசாயன கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு
    • நோய் தொற்று ஏற்படும் அபாயம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எசையனூர் தடுப்பணையில் ஜிலேபி மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    நகராட்சி கழிவுநீர், சாயப்பட்டறை ரசாயன கழிவுநீர் கலந்ததால் ஏராளமான மீன்கள் இறந்ததாக கூறப்படு கிறது. மீன்கள் இறந்து பல நாட்களாக கிடப்பதால் துர் நாற்றம் வீசிவருகிறது. இதனால்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    மேலும் சாயப்பட்டறை ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காட்டு அடுத்த லாடவரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகிரி. இவரது மகள் பூஜா (வயது 20). இவர், நேற்று முன்தினம் இரவு கொக்கு மருந்து சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்தது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றிய, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் முதல்- அமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், காலமுறை ஊதியம், குடும்ப நல ஓய்வூதியம், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க கோரியும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • லாரியின் முன் பகுதி மற்றும் பைக்கில் தீ பரவியதால் இரு வாகனங்களும் நெடுஞ்சாலையில் பற்றி எரிந்தது.
    • காவேரிப்பாக்கம் போலீசார் கருகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே வழியாக வந்த பைக் வாலாஜா அடுத்த சுமைதாங்கி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் லாரியும் பைக்கும் திடீரென தீப்பற்றி எரிந்தது. லாரியின் முன் பகுதி மற்றும் பைக்கில் தீ பரவியதால் இரு வாகனங்களும் நெடுஞ்சாலையில் பற்றி எரிந்தது.

    லாரியின் அடியில் சிக்கிய பைக் தீப்பற்றி எரிந்தது. இதனால் தீயில் சிக்கிய பைக்கில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்து இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டனர்.

    காவேரிப்பாக்கம் போலீசார் கருகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சோதனையில் சிக்கியது
    • 10 பாட்டில்கள் பறிமுதல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உதயசூ ரியன் மற்றும் போலீசார் நேற்று பஸ் நிலையம், வட் டார வளர்ச்சி அலுவலகம், கொண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப் போது கொண்டாபுரம் மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசு மது பாட் டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வ தாக தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் அந்த வீட்டை சோதனை செய்த போது, கள்ளத்தன மாக அரசு மதுபாட்டில். களை பதுக்கி அதிகவிலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த 10 மது பாட்டில் களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    மேலும் இச் சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் மணி (வயது60) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 200 கிராம் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா அருகே வி.சி. மோட்டூர் கிராமம் தனலட் சுமி நகரை சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (வயது 21).

    இவர் நேற்று வி.சி.மோட்டூர் சுடுகாட்டு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந் தார். இதையடுத்து வாலாஜா போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • மோசடி செய்தவர் வீட்டின் முன்பு பொதுமக்கள் குவிந்தனர்

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமை இடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் கிளை அலுவலகங்களை ஆரம்பித்து கடந்த சில ஆண்டுகளாக ஐஎப்எஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

    ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிக வட்டி தருவதாக கூறி ஆசை காட்டி பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்தது. இதுதொடர்பாக பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து பலரை கைது செய்தனர்.

    முக்கிய நிர்வாகிகள் இதுநாள் வரை தலைமறைவாக உள்ளனர்.

    இந்நிலையில் ராணிப் பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட பனப் பாக்கம், மேலபுலம், சயனபுரம், அசநெல்லிகுப்பம், கீழ்வெங்கடா புரம், சேந்தமங்கலம், நாகவேடு உள்ளிட்ட பகுதிகளில் பல நபர் கள் ஐஎப்எஸ் சப் ஏஜன்ட்களாக செயல்பட்டு பலகோடி ரூபாயை பொதுமக்களிடம் வசூல் செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நெமிலி ஆற்றோர தெரு பகுதியை சேர்ந்த ஐஎப்எஸ் ஏஜன்டு ஜெகந்நாதன் (36) என்பவரை மோசடி வழக் கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணையில் உள்ள நிலையில் ஜெகந்நாதன் ஜாமீனில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நேற்று அவர் நெமிலியில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு வந்ததாக தகவல் பரவிய நிலையில், சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஜெகந்நாதன் வீட்டின் முன்பு குவிந்தனர்.

    அப்போது ஆவேச மடைந்த சயனபுரம் பகுதியை சேர்ந்த மோகன்(35), தீரன்(33) ஆகியோர் திடீரென தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தனர்.

    அங்கிருந்தவர்கள் தடுத்து நெமிலி போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற 2 பேர் மீது தண்ணீர் ஊற்றி அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைக்குப்பின் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் ஏஜன்டு வீட்டின்முன்பு 2 வாலிபர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தீயணைப்புதுறையினர் தீயை அனைத்தனர்
    • சூறை காற்றுடன் கன மழை பெய்தது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் நேற்று பிற்பகல் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    மாலை சுமார் 4 மணிக்கு மேல் திடீரென பலத்த சூறை காற்று வீசத்தொடங்கியது. தொடர்ந்து அவ்வப்போது இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது.

    அப்போது பலத்த சத்தத்துடன் பாணாவரம் காந்தி சிலை எதிரே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு சொந்தமான வீட்டின் பின்பு றம் இருந்த தென்னைமரத்தில் மின்னல் தாக்கியதில் மரத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வக அலுவலர் முரளிமனோகர், கிராம உதவியர் வில்சனை அழைத்து மேலும் தீ பரவாமல் தடுத்திட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    இதனிடையே இத்தகவல் அறிந்து வந்த பாணாவரம் போலீசார், சோளிங்கர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் நிலைய அலுவலர் குமரவேல் தலைமையில் வந்த 3 பேர் கொண்ட குழுவினர் தென்னைமரத் தில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

    • ஊர்வலமாக சென்றனர்
    • ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நடந்தது

    அரக்கோணம்:

    ராகுல்காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து அரக்கோணத்தில் கொட்டும் மழையில் ஊர்வலமாக சென்று தீ பந்தத்துடன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஜவகர் பால் மஞ்ச் தலைவர் நரேஷ் குமார் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அைழப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாந்த், முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வந்தமண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக இவர்கள் அரக்கோணம் காமராஜ் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் இளைஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


    • புத்தகத்தில் கையொப்பமிட்டு வாழ்த்து
    • திட்டப்பணிகளை பார்வையிட்டார்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றிய பகு திகளில் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணி களை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார்.

    அப்போது அந்த வழியாக செல்லும்போது அகரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கலெக்டர் சென்றார்.

    அங்கு மாணவ-மாணவிகளிடம் திருக்குறள், வாய்ப்பாடு உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். அதில் 4-ம் வகுப்பு மாணவி. ராகவி கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறினார்.

    இதையடுத்து மாணவியை கலெக்டர் வளர்மதி பாராட்டி புத்தகத்தில் தன் கையொப்பமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் பள்ளி ஆசிரியர், மாணவ மாணவிகளை அவர் பாராட்டினார்.

    • சாலையில் பஸ்சை நிறுத்தி போராட்டம்
    • பஸ்சின் படியில் தொங்கியபடி வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்

    அரக்கோணம்:

    காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த தனியார் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி இளைஞர்கள் சிலர் வந்தனர். இதனால் பஸ் கண்டக்டர் சிவா (வயது 34) படியில் தொங்கியபடி வந்தவர்களை உள்ளே வருமாறு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரி கிறது. இதனிடையே பஸ் பள்ளூர் நிறுத்தம் வந்தபோது வாக் குவாதத்தில் ஈடுபட்டவர்கள் இறங்கி சென்றனர்., பின்னர் பஸ் தக்கோலம் கூட் ரோட்டிற்கு வந்த போது அடையாளம் தெரியாத 5 பேர் திடீரென பஸ் கண்டக்டரை தாக்கிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் சாலையில் பஸ்சை நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீ சார் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கலெக்டர் உத்தரவு
    • ஜெயிலில் அடைத்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவரை அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வழிப்பறியில் ஈடு பட்ட அரக்கோணம் வெங்கடேசபு ரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கரண் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் குற்ற செயல்களை கட்டுப்ப டுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கரணை கைது செய்ய உத்தர விட்டார்.

    இதனையடுத்து கரணை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×